Pages

Friday 31 January 2014

சிந்திப்பீர்!
வேகம்: 
தேகம் வீண் செய்யலாமா?
விளையாடும் பொருளா? சிகரெட்
நல்ல நல்ல விஷயங்கள் பலகோடி
நாமறிந்து அதைச் செய்தால்
நாடும் வீடும் நலம் பெறும்
ஹே!ஹே!ஹே!
வண்ண வண்ண பறவைகள்
ஸ்மோகிங் செய்யுதா?
வட்டமிடும் கழுகுகள் பீடி குடிக்குதா
நுரையீரல்குள்ள ஒரு புகைமூட்டமா?
சுவாசிக்கும் உறுப்பு உனக்கு
விளையாடும் மைதானமா?
ஹே!ஹே!ஹே!
நோய்நொடியைத் தேடிப் போயி லொக்குப்போடுறே
சேடி எல்லாம் தெரிஞ்சிருந்தும் அது என்ன ஹாபி
12, ரிபீட்
பான்பராக்கு பீடாக்குள்ள கிக்கிருக்குதா?
அது உன்னேட உதிரத்தை கெடவைக்குமே!
உயிர் இயங்கும் கலவை என்ன?
தீமைக்கு சிம்மாசனமா?
துள்ளி ஓடும் விலங்கினங்கள் பாக்குப் போடுதா?
பகுத்தறிவு உள்ள மனிதா?
தீமை தேடி ஏன் போகிறாய்
காற்றடிக்கும் திசை எல்லாம் சிஸர்வாடைதான்
சுற்றுப்புற நபர்களுக்கும்
நோய் சமர்ப்பணமா?
12ரிபீட்
போதை வஸ்து போட்டி போட்டு
உள் இறங்கினால்
ஆயுட் காலம் கம்மி என்று நீ அறியாததா!

Friday 17 January 2014

                                          சோகம்
மனம் போராடி போராடி சோர்கின்றது
தினம் சோகத்தில் விடியல்கள் பிறகின்றது
மரம் பூக்காமல் காய்க்காமல் காய்கின்றது
ஏனிந்த இழிவான வாழ்வு
எதைத்தேடி பயணங்கள் நடைபோடுமோ?
என் அகராத்தில் இன்பத்தின் எல்லைகள் கானல் நீரோ
முள்மீது பாதைகள் விரிகின்றது
சொல் எல்லாம் நெருப்பாக பாய்கின்றது
பொய்மை மனம் சுற்றி எனைத் தாக்குகின்றது
உண்மை அன்பைத்தேடி உள் நெஞ்சம் ஏங்குகின்றது
1,2ரிபீட்
மலர் விரியாமல் மொட்டாக கருகுகின்றது
எண்ணம் கரடாக காய்ந்திங்கு வாடுகின்றது
எதற்கிந்த சோதனைகள்
என் உள்ளம்துகளாக உடைகின்றது
சோகம் தீண்டாத நாளில்லை
சுமை இறக்கத்தான் ஆள் இல்லை
தோல் கொடுக்கும் காலம் எனக்கு
துன்பம் தானே தாரை வார்க்குது
1,2ரிபீட்
துணிந்திங்கு அடிவைத்தால்
கை கொடுக்கும் நட்புக் கூட தூரப்போகுது
ஊர்சுற்றும் சேவலிற்கு அடைக்கலம் உண்டு
உண்மையாக வாழும் மனிதர் சாபம் பெற்றவரோ?
துயரக்கடலில் நீந்திடத்தான் என்னை படைத்தனரோ
சோகம்தான் நிலை என்றால்
எதற்கிந்த வாழ்க்கை
எதைத்தேடி பயணங்கள் நடைபோடுமோ.

                                           மலர்ச்சி
ஆண்: ஒருதுளி சிறுதுளி அந்த மழைத்துளி
             கூந்தல் மலரில் விழுந்து
             முதுகில் ஊர்ந்து உள்ளே நுழைந்ததடி
             அதை பருகிட வந்தேன்
             ஆடை சுவைத்ததடி...
             ஒரு பெரும்மழை அந்த ஒருநொடி
             சோலைத்தலைப்பு முடிய இருமுகிலை
             விலக்கிக் காட்டியது வானவில் 
              பெற்றுப் போட்டதோ
              சிற்றிடை மட்டும் அழகாய் தெரிந்து
             அவஸ்த்தை கொண்டது என் மனசு
பெண்: என் கூந்தல் தழுவ உனக்கு மட்டும்
               உரிமை தந்தேன் வாடா என் கள்வா
               என் இதழின் லீலை
               உனக்கு மட்டும் சாகசம் செய்யுமடா
              மொத்தத்தில் முத்தத்தில் குளிபாட்டும்
              என் வதனம் வாடா என் கள்வா
              விரலின் நரம்புகள் நாயனமிசைக்கும்
              நீ என் வீணையடா
             வாடா என் கள்வா சுரங்கள் சுகமே
ஆண்:  நீரோடை இசைபாட என் மேனியில்
               புது புதுச் சேட்டைகள் செய்தபடி
               இருந்தும் உன் தேகம் தீண்டும்
               இன்பம் வேரு எதிலும் இல்லையடி
1-5 ரிபீட்