Pages

Friday 29 November 2019

எத்தனை நாட்க்கள் வாழ்கிறோம் என்பது முக்கியமில்லை... எத்தனை பேர் மனதில் நல்லதனமாக வாழ்கிறோம் என்பதே முக்கியம்👏✍🖕🤲👌👍🤝💅🙏.By.Rk.

Monday 25 November 2019

நாட்கள் என்னை? சந்தோசப்படுத்தியதாக ஒருகர்வம்! என் தன்நம்பிக்கை என்னை? உயர்வாக்கியதாக ஒரு திமிர்! என்சூழல் என்னை? மகிழ்ச்சிப்படுத்தியதாக ஒரு எண்ணம்! என்வசதி என்னை? அமைதிப்படுதியதாக ஒரு மமதை ..!!!!!!!! ஆனால் ஒருசிறுபிரிவு ... அத்தனையும் மாயை என்பதைபுரியவைத்தது. எல்லா உற்சாகமும்.... (என்பேரக்குழந்தைகள்,மற்றும் கூட்டுக்குடும்ப பாசம்) தனிமையை தற்போது உணர்கிறேன்.By.Rk
இன்னிக்கு இனிப்பாக இருக்கிற பல விசயங்கள் பிரிதொரு நாளில் கசப்பாகலாம்..... இன்னிக்கு கசப்பாக இருக்கிற சில விசயங்கள் பிரிதொரு நாளில் இனிப்பாகலாம்... இதுதான் காலத்தின் முரண்பாடு... இனிப்பையும்,கசப்பையும் சமமாக! எடுத்துக்கொண்டோமெனில் அதுதான் தெளிவானதொரு பயணம் .Rk🙏
இன்னிக்கு இனிப்பாக இருக்கிற பல விசயங்கள் பிரிதொரு நாளில் கசப்பாகலாம்..... இன்னிக்கு கசப்பாக இருக்கிற சில விசயங்கள் பிரிதொரு நாளில் இனிப்பாகலாம்... இதுதான் காலத்தின் முரண்பாடு... இனிப்பையும்,கசப்பையும் சமமாக! எடுத்துக்கொண்டோமெனில் அதுதான் தெளிவானதொரு பயணம் .Rk🙏

கற்பூரம் கரைவது போல? விளைநிலமெல்லாம் வீடுகளாகிப்போனது....         நறுமணமலர் உதிர்வதுபோல?             ஏரி குளமெல்லாம் கல்லூரிகளாகிப்போனது ....          சிதறும் மழைத்துளி சிறிது நேரத்தில் உலர்வது போல?                             காடுகள் எல்லாம் தொழிற் கூடங்களாகிப்போனது.....             புற்றீசல் ஓரிருநாட்கள் உயிர்வாழ்வதைப்போல?           இயற்கை! தன்இறகுகளைமுக்காடு போட்டு முழுவதுமாக மூடிக்கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை... இவைகளுக்கெல்லாம் மூலமாக இருக்கும் மானுடர் திருந்தப்போவதும்இல்லை...???By.Rk.

நாட்கள் என்னை? சந்தோசப்படுத்தியதாக ஒருகர்வம்! என் தன்நம்பிக்கை என்னை? உயர்வாக்கியதாக ஒரு திமிர்! என்சூழல் என்னை? மகிழ்ச்சிப்படுத்தியதாக ஒரு எண்ணம்! என்வசதி என்னை? அமைதிப்படுதியதாக ஒரு மமதை ..!!!!!!!! ஆனால் ஒருசிறுபிரிவு ... அத்தனையும் மாயை என்பதைபுரியவைத்தது. எல்லா உற்சாகமும்.... (என்பேரக்குழந்தைகள்,மற்றும் கூட்டுக்குடும்ப பாசம்) தனிமையை தற்போது உணர்கிறேன்.By.Rk
தடைகளை தகர்த்தெறிய நம்பிக்கை விதைகளை ஊன்றிடுங்கள்....By.Rk

Saturday 22 June 2019

நான் தொலைத்தகனவுகளை தேடிப்போகமுடியாது... என்னிடமிருந்து பறிபோன இளமையைமீட்டெடுக்கவும் முடியாது... சுறுப்பாக ,துறுப்பான தினங்களை... திரும்பிப்பார்க்கவும் முடியாது என்னால்.... இனி இந்தபூமியிலிருந்து விடுபடும்போது ஆத்மதிருப்திக்காக.... எனக்குள் சிறு மின்னலாக உருவெடுத்து மின்மினியாக நசுக்கப்பட்டு ஏதோ!குற்றுயிரும் குலைஉயிருமாக கிடக்கும் என்கவிப்பிள்ளைகளை பதியமிட்டு எனக்காண ஓர்அடையாளத்தைவிட்டுவிட்டு இந்தசமூகத்தில்.... சிறுபங்களிப்பை பாவிவிட்டதிருப்தியில் இனிஎன்மிச்சநாட்க்கள் கடக்கும்.By.Rk.

Thursday 20 June 2019

செயலேமேன்மை! உழைத்துப்பார் வாழ்வில், உயர்ந்து காட்டுவாய் !உடற்பயிற்சிசெய்துபார் நோய்களைவென்றுகாட்டுவாய்... பொய்யைஅகற்றி மெய்யைபற்றிப்பார் இதயம்லேசானதைஉணர்வாய்; இரவில் அயர்ந்து தூங்கிப்பார், விடியலில் ஆனந்தப்படுவாய்! இளமையில் உடலைப்பேணிப்பார் முதுமையில் உற்சாகப்படுவாய். By.Rk

Saturday 25 May 2019

ஒருத்தருக்கு உங்களாலும் உதவமுடியும் என்றால் உதவுங்கள்... பணமாகவோ,பொருளாகவோ சொல்லாகவோ செயலாகவோ... அந்த அளவிற்கு இறைவன் நமக்கு ஒருவாய்பை தந்திருக்கிறான்... இது ஒரு கொடுப்பிணை எனநம்புங்கள் நாமும் உயர்வோம் ,நம்தேசமும் உயரும்By.Rk🙏.

Saturday 13 April 2019

விகாரிவருட உறுதிமொழி! ஒருங்கிணைந்த அன்பின்மூலம்... சமத்துவம் ஓங்கட்டும், ஒருங்கிணைந்த சகிப்புத்தன்மைமூலம்... ஒற்றுமை நிலைக்கட்டும், ஒருங்கிணைந்த பிரார்த்தனைமூலம்... நல்லன நடக்கட்டும், ஒருங்கிணைந்த சுகாதாரத்தின்மூலம் பூமிசுத்தமாகட்டும், ஒருங்கிணைந்த இரக்கத்தின்மூலம்.... ஏழ்மைவிலகட்டும், ஒருங்கிணைந்த வேலைபங்கீடின்மூலம்... வசந்தம்பூக்கட்டும், ஒருங்கிணைந்த அறிவுதெளிவின்மூலம் பாலியல்வன்கொடுமை நிகழாதிருக்கட்டும், ஒருங்கிணைந்து இயற்கையை நேசிப்பதன்மூலம்... ஐம்பெரும்பூதமும் வளத்தை அள்ளித்தரட்டும்.கவிஞர்.R.k.🙏

Tuesday 19 March 2019

அன்பின்உறவேநீயே! என்அன்னையைஇழந்தாலும் "அந்த"இடத்தில்நிற்பதுநீயே! ஆருயிர் தந்தை மறைந்து போனாலும்இங்கே இருந்து அரவணைத்து ஆறுதல் தருவதுநீயே.... உந்தன் பாசம்"எந்த"நேசத்திற்கும் இணையில்லை.... உறவுகள்பலஉண்டு, உணர்வின் மதிப்பறிந்து உயிரியின்பொருள்அறிந்து உன்னைப்'போல்கண்ணீரை துடைத்தது யாருமில்லை... நோய்விழும்போதுதாங்கிடும் தன்மை... என்னைஎதிர்ப்போற்கு சிம்மசொப்பனம்காட்டியதும் நீயே! உன்பலம்தானேஎன்ஆயுதம் தீமையைகண்டால் கொதித்திடும்எரிமலைநீயே! சேட்டைகள்செய்தால், அடக்கிடும்வன்மை; குழந்தையைப்போலே காத்திடும்மென்மை; அடுத்தஜென்மம் ஒன்றிந்தால் உன்மகளாய்பிறந்திடவரம் கேட்பேன் இறைவனிடம்.🙏.

Wednesday 6 March 2019

மகளீர்(அர்த்தம்)தினக்கவிதை..... ஒருபெண்அடங்கிஇருப்பது அன்பிற்கு வயப்பட்டிருக்கிறாள் என்றுஅர்த்தம்.... ஒருபெண்பொறுத்ததுப்போவது தன்சந்ததியினருக்கு நல் பாடம்கற்பிக்க என்றுஅர்த்தம்.... ஒருபெண் மௌனித்து கிடப்பது பின்ஒருநாள் புரட்டப்போகிறாள் என்றுஅர்த்தம்.... ஒருபெண்எரிச்சல்(or) கோபப் பட்டால் நிறைவேறாதஆசையில் அவதிப்படுகிறாள் என்றுஅர்த்தம்.... ஒருபெண்அதிகமாக வாய் அடிப்பது இயலாமையின்வெளிப்பாடு என்றுஆர்த்தம்.... ஒருபெண்அனைத்தும் கலந்தவளாகஇருப்பது தன்மானத்தோடு....? புகுந்தவீட்டிற்கும் பிறந்தவீட்டிற்கும் பெருமைசேர்க்கிறாள் என்றுஅர்த்தம்.By.R.k.

Tuesday 5 February 2019

மெனளம்!வார்த்தைவெளிவராதபோது உதிக்கும்உணர்வு மெளனம்... மலர்கள்பேசிக்கொள்ளும் அற்புதபாசை மெளனம்.... காற்றுகைகோர்த்து சற்றுஆசுவாசப்படுத்திடும்நொடி மெளனம்... ஆழ்ந்ததியானத்தில் உள்வாங்கிச்செல்லும் அரியநிகழ்வு மெளனம்.... மொத்தஉலகின்சகிப்பின் உச்சகட்டசமாதனக்கூற்று மெளனம்.R.k.

Friday 18 January 2019

மணமகள் வரவேற்பு!(தலைப்பு) ☝️ 💐💐🙏 🙏 குழு:- மணமகளே, மணமகளே வா,வா,வா/வா,வா,வா! மாமியார்:- மகள் இடம் நிரப்பவந்தவளே "எங்கள்"வீட்டு குலமகளே நானும் ஒருநாள் மருமகளே! ஆத்திரம் அதிகாரம் என்னில் இருக்காது .... பருவத்தின்ஆசை பண்பாய்பேணுங்கள், குறை, நிறை கண்டு தவறாமல் ஒருவரைஒருவர்புரிந்துகொண்டுஅகம் மகிழ்ந்து பாங்காய் குடும்பம் நடத்துங்கள், அறிவுள்ளகுழந்தை இரண்டு பெற்று இனிதாய் வாழ்ந்திடுங்கள் குழு:- மணமகளே,மணமகளே வா,வா,வா /வா,வா வா நாத்தனார்;- மூத்தவர் அனுபவம் முன்வைத்து வரவுக்குள் செலவு செய்து வசந்தம் காணுங்கள், உறவுக்குள்உரிமை கொண்டு, நாத்தனாரை தோழியாக. நினைத்தால், ஆணவம்,அடக்கு முறை எங்களில்இருக்காது.... குழு ;- மணமகளே மணமகளே . வா,வா,வா /வா,வா,வா அன்பாய்நீ இருப்பாய் அழகாய் அரவணைப்போம் புதுஇடம்என்றும் புகழிடம்உனக்கு இதை புரிந்து அறிந்து நடந்திடுவாய் உன் தாய் தந்தைபாசம் என்றும்'உண்டு நல் புதுமை பல செய்து குடும்பப் பெறுமை காப்பாய் கூட்டுக் குடும்பம் களைந்திடாமல் கூடிமகிழ்ந்து வாழ்ந்திடுவாய், குழு:-மணமகளே,மணமகளே வா,வா,வா / வா,வா வா. . .

எண்ணற்ற விண்மீன்கள் ஏகாந்தலோகத்தில்சுழன்றாலும் என்னோடுகைகோர்த்து தொடரும் விடிந்தாலும்நிற்கும் விடிவெள்ளி நீயே.... திரும்பாமல்திசைமாறிச் சென்றால், வெறுப்பாகிப்போவேன்என்றா!கல்யாணப்பெண்ணாகநிற்க... என்னை கை பிடித்து காதல் ரசம் சொட்டச் சொட்ட ரசித்தாயே கனவில்... சண்டாளா / பெண்டாள வருவாயோ பெருமூச்சில் ஏங்கி?பனிச்சாரல்தூவ கனிச்சாரல்மேவ ஸ்வீட்ராஸ்க்கள் டே,ஸ்வீட்ராஸ்கள் ஸ்வீட்ராஸ்கள். டேஸ்வீட்ராஸ்கள் .செல்லம் என்றழைத்தாயே கை பேசிப் பேச்சில் .... மெல்லச்சரசரத்து, மேனிகிறுகிறுத்து, உள்ளம்குறுகுறுத்து, கண்ணும்கண்ணும்கலந்தது காதல்தீயில்தணிந்தது.. .இந்த; மண்ணில்என்சுவாசம் நீங்கும்வரை! உன்இணையாக,துணையாக வழிநெடுகநான்இருப்பேன் நீதோத்தாலும்,ஜெயித்தாலும் தோள்மீதுசாய்த்திடுவேன்' அந்தவானத்தில்மிதந்தாலும் வடிகஞ்சி குடித்தாலும் உன்னோடு பகிர்ந்திடுவேன் . 1to5.

என்னப் போல, என்னப் போல, என்னப் போல யாரு மில்லை!.. எனக்கு நிகரா ஆளும் இல்ல அப்படி "ந" செல்ல வரவுமில்ல? அன்னை வளர்த்தா உருப்படியா... கட்டுக் கட்டுக் கட்டா கரன்சியோட படுத்துப் புரண்டவ நா(ன்)... எனக்கு மவுசு கூட என்று கூற வரவுமில்ல... அப்பாசொன்ன வேதம் ! தட்டி நானும் நடந்ததில்ல... கண்ணப் போல , கண்ணப் போல, கண்ணப் போல காத்து நிற்க நட்பு வட்டம் மிகப் பெரிசு... தப்பு தப்பா ஏதும் செய்யல, மப்பு ஏறி உளறவில்ல.... மா மே! வகுத்த பாதையில... நல்ல கருத்த கண்டு வந்தே! நேற்று வர நானா இருந்தே? என்னனோட ரேஞ்ஜூ வேற , வேற! என்னவோ தினுசா மனசுக்குள் மின் சாரம்உரச.... பெண்ணக் காட்டி பெண்ணக் காட்டி இறைவன் போனார்... கண்ணக் கட்டி காட்டில் விட்ட கதையா கதைக்கிறேனே... கேட்காம கெடச்சது ஹீரோஹோண்டா ?.. ஆனாலும் அவ சைக்கிள்ள தொகுதிக்க ஆசப் பட்டே(ன்) கேட்டாலே தருவாளோ! பார்த்தாலே, சிரிப்பாளோ! பக்கத்தில் வருவாளோ? தாக்கத்தை அறிவாளோ... நோகாம நொங்கு தின் னே ! பனிய உருஞ்சு கதிராட்டம் அவளத்தேடி ஏக்கத்தில்...ஏங்கி,ஏங்கி ... பெண்ணக் காட்டி, பெண்ணக் காட்டி இறைவன் போனார்... கண்ணக் கட்டி காட்டில் விட்ட கதையாக் கதைக்கிறேனே, நீச்சல் குளம் எனக்கிருக்கு ... ஆனாலும் அவ குளிச்ச குட்டக் குள்ள நீந்தத்தானே! பிடிச்சிருக்கு... பூந்தோட்டம்நாளிருக்கு ஜவுளி கட ஆறிருக்கு ... கெத்துக்காட்ட வரவில்ல? அவ தொட்ட கைக்குட்ட வேணுமின்னு ஏ மனசு மறுதலிக்க... அவ கூந்தலில் சூடிப்போட்ட மலருக்கு ஏகத்துக்கு மணமிருக்கு... ...... ஏ வீட்டு பக்கத்தில மாந்தோப்பு தென்னந்தோப்பு அம்மா வோட சீர் வரிசை... . . . ........ ஆனாலும் அவ தொட்ட நெல்லி மரம் பிடிச்சிருக்கு . 1 to4 ரிபிட் .
,காற்றாக சுற்றிவந்தே ஒருகலத்தில் மாட்டிக்கிட்ட... கருசக்காட்டு பொண்ணுமேல நேசவச்சே .... ஒ சுருக்கு பையில் என்னப்போட்டு ... ...ஏடிகூட்டிப்போடி என்னநீயு( ம்)-2... எத்தனை யோ நூல்நயம் கண்டிருக்கே(ன்) நீ ஒரு நூலகம் நெனப்பொரு கானகம்..... வட்ட மதி போன்ற தொரு முகத்தில .... வட்டத்தை போட்டு நானும் சிறைப்பட்டே ... ஏடிகூட்டிப்போடி என்ன நீயு(ம்)-2 ஏகத்துக்கு சொந்த பந்தம் தாகத்துக்கு உன்னத்தா தேடுறனே ... மோகவலை சிக்கிப்புட்டே மோகனத்தில் மிதக்கிறே( ன்) அத்தனையும் அசால்ட்டாக கிடைத்திருக்க...நொடிப்பொழுது மாற்றமிது.... ... .ஏடி கூட்டிப் போடி என்ன நீயு(ம்) _2 நீந்திப் பார்த்தேன் குளமில்ல... நடந்து பார்த்தேன் நிலமில்ல.... பறந்து பார்த்தேன் வான் இல்ல... தானாப் பேசி தவிக்கிறேனே! . ஒ சேலைக்குள்ள மடிப்பிருக்கு முந்தானையில் கோர்த்துக் கோடி... .1to 6.ரிபிட் .
மண்ணோடபெருமை காப்பாற்றனும் நம்!மரபோடவளத்த(வளமை) நாம்போற்றனும்... வேஷ்டிகட்டி ,வேஷ்டிகட்டி தைத்திருநாள கும்பம்வச்சு வரவேற்கணும்... குலமகளேநீயும் சேலகட்டி, சேலகட்டி குலவைபோட்டுபொங்கவையி...வாழைஇலைவிரிச்சுவச்சு... வகை,வகையா கறி சமைச்சுஅன்போட பரிமாறனும்... இல்லத்தில்ஆனந்தம் கூத்தாடனும் உள்ளத்தில் உற்சாக சுதிஏறனும் இல்லறம் பண்போட நடைபோடனும் எல்லோறும் இனிதாக வாழ்ந்து1,2,3,4.
சோலை மாநகரில் நான் ஒரு செல்லப் பிள்ளை... எட்டுத்திக்கும் எம்பேர முரசு கொட்டும்.... பச்சை வெளி பரவசம் பார்க்க ,குதுகளம்...வாய்க்கால் வரப்பெங்கும் விவசாயி கைபட்ட பாங்கான அரவணைப்பு, நீருக்குபஞ்மில்ல...சும்மா கொட்டமடிப்போ...சுதந்திரமா சுற்றி வருவோ! நாட்டு நலத்திட்டம்தீட்டி வளமின்னும் கூட்டி தீரத்தை காட்டி அன்பாக கைகோர்ப்போம்... கேட்டது கிடச்சிருக்கு கேள்வி கேட்க யாருமில்ல, தோழா !தோல்வி என்றும் கண்டதில்ல.....நினைச்சது நடந்திருக்கு...தோழர் புடைசூல தினம் மகிழ்ச்சியில் புரண்டிருக்கே... 1, to4ரிபிட்.. .பதினெட்டு பட்டி எல்லாம் ஒருங்கிணைத்து கொண்டாடும் ஏஊரு திருவிழா.... அட !என்னடா யோசன?.... .அங்க,அங்க பாருங்கடா... முதன் முதலில் உரசியதொரு, தூ..வானம்( நண்பன் -த்து)...".ஸ்" விண்மீன்கள் விளையாட வருகின்றதே... விடி கூத்தாடி கடக்கின்றதே.. அறியாமலே அறிந்தேன்.... அவளொரு மோகனம்... திறம்பட்ட ஓவியம் ... வன தேவதை சம்மதம் சொல்லிடு ஆலிங்கணம்செய்திடு? முதல்முதலில் உரசியதொரு பூந்தென்றல் .... மெல்லிடையில் பனிக்காற்று மேவ.. பால் மேனி தாவ! கிறக்கத்தில் விரல் பின்னி மீட்டிடு... உன் வீணை நானே! மயக்கத்தில் துடிக்கிறேன் மனமது என் வசம் இல்லை.... இனி எந்தன் வாழ்வில் பூபாளம் நீயே...துணைவர வன தேவதை சம்மதம் சொல்லிடு ஆலிங்கணம் செய்திடு. ...
எடக்கு,மொடக்கு(தலைப்பு) ஆண்;- எ,ஒட்டுப்புள்ளு பொம்பள ஒன்ன விட்டுப் போவனா தொட்டுப்புட்டே ஆம்பள தள்ளித்,தள்ளிப் போவனா கிறுக்குப்பொண்ணா கூடத்தானேஅலையுறே என்ன அங்கஇங்க போகக்கூட விடாம... பெண்:- கோயில் காளைப்போல கொட்டம் மேயுறீயே? ஒகொட்டந்தானே அடக்கவந்தே நானே சுத்தி சுத்திப் பார்க்குற!வச்சகண்ணுவாங்காம" அக்கம் பக்கம் அலையுற?மாற்றான் தோட்ட மல்லிகை மணக்கும்தானே நினைக்குறே; ஆண்:- போக்கத்த வாயிக்கு புகையில தா கிடைச்சிருக்கு, எ,ஒட்டுபுள்ளு பொம்பள முதல்................................. போகக்கூடவிடாம,வரை ரிபிட் பெண்:- சின்னப்புத்தி ஆம்பள வெல்லக் கட்டி இருக்கும் போது வேறஒன்னு கேட்குதா ?அராலாக்குப் பாலக்காய்ச்சி பக்குவமா நாந்தந்தா ! அப்படி,இப்படி மேயுற; ஆண்:- சந்தேகப் பேய்புடிச்சி சும்மா,சும்மா நச்சரிசரிக்காத எ,ஒட்டுபுள்ளு பொம்பள முதல் .............................................அங்கஇங்க போகக்கூடவிடாம வரை ரிபிட் பெண்:- அறுவாமீசமுறுக்கிகாட்டி கடைக்கண்ணால் கடலைபோடுற எதிர்வீட்டு அனுசாவை ஏறெடுத்துப் பார்க்குறே!அவபுருசன்காரன் பார்த்துப்புட்டா அறுத்துடுவான் ஆம்பள? ஆண்:- எ,ஒட்டுப்புள்ளு பொம்மள முதல்............................................... . அங்கஇங்கபோகக்கூடவிடாம வரை ரிபிட்.

Saturday 5 January 2019

நர்கீஸ்....நிஷா.....மற்றும் கஜாபுயலின்கோரத்தாண்ட வத்தின் கொடுமைகளைகோர்த்துப் போட்டாலும்மலை,மலையாக அல்லும்உயரும்..... அலை,அலையாக துயரங்கள்.!கண்ணீரை!சேர்த்துவைத்தாலும் கடலாககளம்மாறும்? என்மக்கள்இனிமேலு(ம்)விளிங்கஅட;என்மக்கள்இனிமேலு(ம்) விழிங்க... என்மக்கள்;என்மக்கள்; என்மக்கள்அட,என்மக்கள் இனிமேலு(ம்) விளிங்க.... வருசத்துக்குநாளுதடவ புரட்டிப்போட்டு.... சுத்திஅடிக்கும்புயலுக்கு சும்மா சும்மா பேரெதுக்கு அதன தடுக்கவழியிருக்கு ஆதிதமிழன்கூற்றிருக்கு இயற்கைபேரிடரமுட்டிமோதி ஒருகைபார்ப்போம்....1,2,3,4... மெய்ஞானத்தைஒதுக்கிப்புட்டு விஞ்ஞானத்தைவளர்த்துப் புட்டோம்... நம்ம மலை எல்லாம் சுரண்டிப்போட்டுமண்ணோடு மக்கவச்சோம்1,2,3,4.; ?அரசமரம்ஆழமரம்நட்டுப்புட்டா மச்சா; அள்ளிக் கொண்டுபோகாது சூறாவளி... பொண்டுபுள்ளபாதுகாக்கும் குடிசைஎல்லாம்காற்றோடு பறக்காது... வேப்பமரம்புளியமரம்நட்டுப்புட்டாபுட்டுக்கிட்டுபுயலோடுபோகாது விவசாயம்தா! மூங்கில்களைபாவிவச்சா தாவி வந்துதாக்காது ஆழிப்பேரலையு(ம்)... தண்ணிக்குள்ள தத்தளிக்கும் சங்கடத்த' இனி.நம்ம சந்ததிசந்திக்க வேண்டாமே!..1,2,3,4.

Friday 4 January 2019

ஓட்டுக்கேட்டுவருவாக     கும்பிடுபோட்டு...                       குடிசவாசல் நிலைப்படி தாண்டி சந்து,பொந்துதிரிவாக                    வாக்குச் சீட்டு சேகரிக்க?                   கூலக் கும்பிடக் கண்டு மயங்க மாட்டோம்புரியும்... .                           ஆனா! கரண்சி நோட்டப் பார்த்தா ஜொள்ளு வடிப்போம் தெரியும்     உரிமை இழந்து ஓட்டவித்தா ஓட்டாண்டிதா  புத்திகெட்டு                  சக்தி இழந்துபுலம்ப  வேண்டுமா?/தூங்கியது போதும் தோழா!    பதுங்கியது போதும் தோழா பகடைகளாய்கிடந்துவிட்டோம்    ஓட்டுக்கு காசுவாங்கி....                          குடி தண்ணி பஞ்சம் வந்தா               யாரத் தேடுவோம்                      பள்ளமான சாலைகளமேவித் தர    யாரக் கேட்போம்?கார்பரேட்டுக்காரணுங்க காலவச்சு நம்ம!விளைநிலத்த பாழடிச்சு       விணை விதைதச்சாய்ங்க                  நஷ்ட ஈடுகேட்டுப்போனா                கஷ்டம் மேலும்தொடரும்,                       நோட்டநீட்டி ஓட்டுக்கேட்டுவந்தவுக ஒய்யாரம காருக்குள்ள !                     கைய நீட்டி கேள்விகேட்டு       தட்டிக்கேட்டா கம்பி எண்ணி               நம்ம காலம்கழியும்;                  தூங்கியது போதும் தோழா ஒதுங்கியதுபோதும் தோழா        ஓட்டுக்கு காசு கொடுத்தா தூக்கிப்போட்டு நெஞ்ச நிமிர்த்தி ஜனநாயகம் காக்க சபதம் எடுப்போம்.

மணமகள் வரவேற்பு!(தலைப்பு) ☝️ 💐💐🙏 🙏 குழு:-                                மணமகளே, மணமகளே,         வா,வா,வா/வா,வா,வா!                                   மாமியார்:-                                              மகள் இடம் நிரப்பவந்தவளே "எங்கள்"வீட்டு குலமகளே நானும் ஒருநாள் மருமகளே! ஆத்திரம் அதிகாரம் என்னில் இருக்காது .... பருவத்தின்ஆசை பண்பாய்பேணுங்கள், குறை, நிறை கண்டு தவறாமல் ஒருவரைஒருவர்புரிந்துகொண்டு     அகம் மகிழ்ந்து பாங்காய்             குடும்பம் நடத்துங்கள், அறிவுள்ளகுழந்தை இரண்டு பெற்று இனிதாய் வாழ்ந்திடுங்கள்                                    குழு:-                      மணமகளே,மணமகளே,          வா,வா,வா /வா,வா வா           நாத்தனார்;-                                     மூத்தவர் அனுபவம் முன்வைத்து                                வரவுக்குள் செலவு செய்து            வசந்தம் காணுங்கள், உறவுக்குள்உரிமை கொண்டு, நாத்தனாரை தோழியாக நினைப்பாய் ஆணவம்,அடக்கு முறை எங்களில்இருக்காது....                       குழு ;-                                              மணமகளே மணமகளே,          வா,வா,வா /வா,வா,வா             அன்பாய்நீ இருப்பாய் அழகாய் அரவணைப்போம்            புதுஇடம்என்றும் புகழிடம்உனக்கு    இதை புரிந்து அறிந்து நடந்திடுவாய் உன் தாய் தந்தைபாசம் என்றும்'உண்டு நல் புதுமை பல செய்து குடும்பப் பெறுமை காப்பாய் கூட்டுக் குடும்பம் களைந்திடாமல் கூடிமகிழ்ந்து வாழ்ந்திடுவாய்,                                  குழு:-             மணமகளே,மணமகளே,          வா,வா,வா / வா,வா வா. . .

தமிழா! தமிழா சங்கத்தமிழா, நம்மண்ணின்பண்பாடு மங்காதசிறப்போடு விளையாடு,விளையாடு        ஜல்லிக்கட்டு எ,எஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டுஎ,எஜல்லிக்கட்டு வீரத்தமிழர் விளையாட்டு                உலகம் எங்கும் நிலைநாட்டு வகைவகையாவரிசைகட்டி வாடிவாசல்தேடிவரும் காளைகளும் காளையரே ;                                உங்கவீரத்த எடைபோட எகிறித்தாவும் தில்லக்காட்டு , திமிலப்புடி, திமிறும்பாரு,தீண்டிப்பாரு ஜல்லிக்கட்டுஎ,எஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டுஎ,எஜல்லிக்கட்டு கருப்பசாமிகோயில்காளை கம்பீரமாமிரட்டும்                       சிவகங்கை சீமக்காளை சீறிப்பாயும் வருசநாட்டுசெவளைக்காளை செம;தூள்பறத்தும் துணிவக்காட்டு திமிலப்புடி,திமிரும்பாரு ஜல்லிக்கட்டுஎ,எஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டுஎ,எஜல்லிக்கட்டு சூறக்கோட்டக்காளை அதுகளமிறங்கிவந்தா கதிகலங்கும்பாரு, கொங்குநாட்டுமச்சக்காள அகங்காரசெறுக்கோடு நடைபோடும்!ஜல்லிக்கட்டுஎஎஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டுஎ,எஜல்லிக்கட்டு மணப்பாறைமயிலக்காள கோபக்காரக்காள...                 ரோசக்காரக் காளையரே!               அரும்பு "மீச"முறுக்கிக்காட்டி துள்ளிக்கிட்டு ! சும்மா,குறும்போட; விளையாடு,விளையாடு ஜல்லிக்கட்டுஎ,எஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டுஎ,எஜல்லிக்கட்டு காங்கேயக்காரி சிலுப்பிக்கிட்டு' தகிடுதத்தம்போடவைக்கும் முறையோடமோதிப்பாரு வாலப்புடிக்காத, கொம்பத்தழுவாத, துள்ளிக்கிட்டு,திமிலக்கட்டி       மவ(க)னே மல்லுக்கட்டு.... ஜல்லிக்கட்டுஎ,எஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டுஎ,எஜல்லிக்கட்டு                நம் மண்ணின் பண்பாடு              மங்காத சிறப்போடு           விளையாடு,விளையாடு       வீரத்தமிழன் விளையாட்டு உலகெங்கும் நிலைநாட்டு ஜல்லிக்கட்டுஎ,எ ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டுஎ,எஜல்லிக்கட்டு.

சமநீதிவேண்டும் சமுதாயம்உயர மக்களாட்சிசிறந்திடவே வாக்குரிமைபயன்பெறவே தில்லக்காட்டு திமிரக்கூட்டு உரம்போட்டுஉசுப்பேத்து இளைஞர்பட்டாளம் துள்ளிக்கிட்டு மல்லுக்கட்டி ஆட்டம்காட்டும் அநீதியவேறோடு ஒழிப்போம் ஜனநாயகத்தை பணநாயகம்தா ஆளவிடாமல் தூர்வாரி துருப்பிடித்தசட்டத்தில் ஒட்டடையஅடிப்போம் நம்மநாட்டுக்குஏத்தபடி சோடைகளைவிரட்டிவிட்டு நம்மதமிழ்நாட்டை சொர்க்கபூமிஆக்கிடுவோம் கானிநிலமும்வளம்பெறவே வழிவகைசெய்திடுவோம் வெறும்பேச்சு வெட்டி பசப்பு வேட்டை ஆடி பொறுப்போடுசெயல்பட்டு தலைநிமிர்ந்து; கருத்தாக்கம்செய்வோம்.