Pages

Wednesday 27 November 2013

மலராத காதல்!


வண்டு வந்து மலரில் அமர்ந்தது...
தேனை சுவைக்காமல் சென்றுவிட்டது
மலருக்கு வழிக்கும் என்றோ?
காதல்!
உள்ளுணர்வு இரண்டும் உணரும் போது
உண்டாவது காதல்!
உணர்ச்சிகளை மட்டும் பாராமல்
உணர்வுகளையும் மதித்து
வாழ்வதை நெறிபிறழாமல்
வாழவைப்பது காதல்!
மலர்களின் மென்மையை
மெல்ல உணரச்செய்து
முட்களின் வேதனையை
சுவைக்கச் செய்வது காதல்!
இன்ப துன்ப வழிமுறையைப்
புரியச் செய்து முழு மனிதர்களாய்
உருவெடுக்கச் செய்வது காதல்!
இருவர் வாழ்வின் கடைநொடி வரை
அன்பு உறங்காமல் உதித்திருக்கும்
உள்ளத்தின் உன்னத எண்ணமே காதல்!
மெல்லிய முகில் எடுத்து
மேனி செய்யப்பட்டதோ?
தெள்ளிய நீரில் தோய்த்து
சேர்க்கப்பட்டதோ?
பொன் துகள் எடுத்து தூவி
வார்க்கப்பட்டதோ?
வாசமிகு பூக்களின் மகரந்த கலவையில்
நிறைக்கப்பட்டதோ?
உன் தேகம் புதுபொழிவுடன் திகழ்கிறது.
                   காதல்!
என்னை உன்னில் தொலைத்தேன்!
எடுத்துவிடத் துடிக்கிறேன்...
எண்ணியது முடியவில்லை;
இணைந்து விடு வேறு வழி இல்லை.
சாதிக்க நினைப்பவர்கள் தோற்கிறார்கள்
சாதிக்க முயல்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்
எப்பொழுதோ! வரும் குரங்குப் படைக்காக
எப்பொழுதும் பதறிக்கொண்டு இருக்கிறது
மனக்குரங்கு.
உயிர் நிலை!
ஆற்றில் கிடக்கும் மீன் இனம்
லட்சியத்தை நோக்கியா செல்கிறது!
வாழ்ந்திடத்தானே இயங்குகிறது
வலை போட்டு எடுத்து உண்ண
மனித மனம் ஏன் துடிக்கிறது.
             உபசரிப்பு:-

உபசரிப்பு ஒரு புன்சிரிப்பு போதுமே!
ரோஜா அழகுதான்
அதனால் தானோ? என்னவோ!
முட்கள் அரணாக இருக்கிறதோ?
சந்தை கூட்டத்து
மந்தை ஆடு போல
விந்தை உலகமிது
ஒருநிமிடக்கதை
அவன் நல்லவன் என்பதால்
இதயத்தில் இடம் பிடித்தான்
அவன் வல்லவன் என்றதால்
உயிரில் கரைத்தேன்
ஆம் காதலின் அரிச்சுவடு அது
சாதிதடை என்று
சாதித்தனர் பெற்றோர்
சரிதான்..
காதலையும் துறக்க முடியவில்லை
பாசத்தையும் ஒதுக்க  விலக்க முடியவில்லை
சூழ்நிலை கைதிநான்
எவருக்கும் வழியில்லாமல்
எனக்கு மட்டும் வலியுடன் கூடியவழி..
பார்த்தேன்...
இன்று கன்னியாஸ்திரி ஆகிவிட்டேன்.
தானமிதுதானம்
எண்ணிக் கொண்டு வாருங்க
எத்தனை தானம் பாருங்க
கண்தானம் உயர்வுதான்
ரத்ததானம் சிறப்புதான்
பொருள்தானம் கருணைதான்
அன்புதானம் நேசந்தான்
அன்னதானம் பசிபோக்கும்தான்
கல்விதானம் வாழ்வுதான்
ஆடைதானம் உதவிதான்
உடல்தானம் மதிப்புதான்
மண்தானம் ஏற்றம்தான்
நிதானம்தான் என்றும்
வேண்டும்தான்.
செய்யாதே!
தீமை கண்டு அஞ்சாதே
தீவிரவாதம் செய்யாதே
அடுத்தவரை வையாதே
அடம் புடிச்சு துள்ளாதே
பிறர் பொருளை எடுக்காதே
பொய்ய்யத்தானே சொல்லாதே
தாத்தாவைத்தான் திட்டாதே
பாட்டியைத்தான் தள்ளாதே
கண்டத கடியத திண்ணாதே
கண்டபடி பேசாதே
சதிகண்டு செல்லாதே
சத்தியத்தை மறவாதே
சந்தேகத்தை வளர்க்காதே
சாதிக்குள்ள போகாதே
ஆகாததை செய்யாதே
அவஸ்தைப் பட்டுத் திரியாதே
கேளுதம்பி!
வா வா நீ தம்பி
வாழ வாழ வா தம்பி
பள்ளமேடு பாத்து நட...
இருளைக் கண்டுபயம் ஏனோ?
பேயி பூதம் இல்ல தம்பி
பேசுறது வெட்டி தம்பி
அடுத்த புள்ளைய கிள்ளுறது
அடிச்சு கடிச்சு வைக்கிறது
கெட்ட பழக்கம் அது தம்பி
சேர்த்துக்கொண்டு விளையாடு
கோபம் கொஞ்சம் போக்கிடு
கோவை இதழில் சிரிதம்பி
இரக்கமுள்ளவர் காந்தி
இரக்கமற்றவர் கோட்சே
இருவருமே இந்த மண்னின் மைந்தர்கள்
இவர்களைப் போல
இருப்பது அரிது...
உண்மைக்கு அழிவில்லை
உலகை அதுகாக்கும்
உயர்ந்தவர் கொள்கை
நிலைத்து நிற்கும்
உத்தமர் பாதை வழிகாட்டும்
அஹிம்சை ஆபத்தில்லை
ஆணவம் சிறந்ததில்லை
சரித்திரம் சொல்லும் பாடமிது
நல்லோர் சொல் என்றும் வேதம் அது
பழத்தின் பயன்கள்
திராட்சைதான் இதயத்துக்கு
பலம் சேர்க்கும்
பப்பாளிதான் கண்ணுக்கு
ஒளிகூட்டும்
மாதுளம் பழம்தான் வயிற்றுக்கு
நன்மை தரும்
நல்ல நல்ல வாழைப்பழம்
குடலுக்கு உடலுக்கு ஆரோக்கியம் நல்கும்
ஆப்பிள் பழம் ஆயுளை
விருத்தி செய்யும்
அன்னசியும் தேடணும்
சப்போட்டா சாப்பிடணும்
ஸ்டிராபெர்ரி உண்ணனும்
கொய்யாப்பழம் மலம் இளக்கும்
மாம்பழம் போஷாக்கு
பலாப்பழம் பல்லுக்கு
உறுதி தரும்
          பழவகை!
பழவகையில பலகாரம்
அத்தனையும் சத்துணவு
ஆசையோடு அப்பா தந்தால்
ஆவலோடு வாங்கணும்
விரும்பி சுவைச்சு திங்கணும்
திரும்ப திரும்ப கேட்கணும்
உடலுக்குள் உதிரம் கூடும்
உற்சாகம் ததும்பிடும்
அழகுகூடி அம்சம் தரும்

Tuesday 26 November 2013

காய்கறி!
கலர் கலராய் காய்கறி
பச்சை நிற வெள்ளரி
ஆரஞ்சு நிற காரட்டு
சிவப்பு நிற பீட்ரூட்
சாம்பல் நிற பூசனி
மஞ்சள் நிற தக்காளி
வகை வகையாய் கீரை
வாசலிலே வித்து வரும்
அம்மா கிட்ட சொல்லி
சமைச்சுதானே வாங்கி நீயும் திண்ணனும்
தளதளன்னு உடம்பு இருக்கும்
தங்கம் போல பளபளக்கும்
நித்தம் நீயும் உண்ணனும்
பலசத்து கலந்திருக்கும்
ஒவ்வொறு காய்க்கும் வெவ்வேறுருசியிருக்கும்
உடல் உறுதியோடு பலப்படும்
ஓடியாடி விளையாட
சோர்வை போக்கும் காய்கறி
காக்கா!
காக்கா காக்கா நீ கருப்பு
அப்பா கூடத் தான் கருப்பு
பார்க்க பார்க்க சுறுசுறுப்பு
அம்மா கூட கலகலப்பு
அத்த ஒரு மக்கு காக்கா
அண்ணா ஒரு குட்டிக் காக்கா
அம்மா நானும் வெள்ள காக்கா
பங்கிட்டுத் திண்ணும் அறிவு காக்கா
பாசம் உள்ள குள்ள காக்கா
கூடி வாழும் நல்ல காக்கா
பாப்பா பழகு!
பாப்பா பாப்பா நீ பழகு
வாழ வாழ நீ பழகு
மெல்ல மெல்ல நீ பழகு
நல்ல வார்த்தை நீ பேசிப் பழகு
தீமை  கண்டு விரட்டப்பழகு
கெட்ட செயலை விட்டுப்பழகு
சிறந்த கருத்தை ஏற்கப்பழகு
கருணை காட்டி வாழப்பழகு
நாணலாக வளைய பழகு
பெரியவரை மதிக்கப்பழகு
இடம் அறிந்து வெல்லப்பழகு
விளையாடிக் களித்துப்பழகு
உடற் பயிற்சி செய்து பழகு
அளவோடு உண்டு பழகு
ஆறு மணிக்கு படிக்க பழகு

விடியும் பொழுது
செல்ல செல்ல குட்டி;
கரும்புச் சக்கரக்கட்டி;
சோம்பி துவண்டு சொக்காதே;
எரிச்சல் பட்டுப்பார்க்காதே...

சும்மா தானே அழுகாதே
ப்ல்லை நீயும் துலக்கும் போது
பற்பசையை திண்ணாதே!
குளியல் போடும் போது..

சோப்பைத் தானே கரைக்காதே
கையை அசுத்தம் செய்யாதே
நகத்தை கடிச்சு சேட்டை
ஏதும் செய்யாதே
விடியும் பொழுது.
சிறுவர் பாடல்கள்
வானில் இருந்து கொட்டுது
வட்ட வட்ட மழைத் துளி
வாசலிலே விழுகுது
செல்லக் கண்ணே நீ பாரு
அதை எட்ட இருந்து ரசித்திடு
கையில் அள்ளி விளையாண்டால்
சளியும் காய்ச்சலும் வந்திடும்
சங்கடம் உனக்குத்தானே
இதை சற்று சிந்தி நீயே
சாரல் மழை தூவுது
குடையும் நீ கொண்டுபோ.
முரண்பாடு
மனிதன் அரித்தான் கடல் அன்னையின் குழந்தைகளை

சுனாமி அழித்தது மனிதைன வித்துக்களை.
சுனாமி
வாழ்வளித்தக் கடல் தாயே
வாரிச் சுருட்டியது முறையா?
புது வருடப்பிறப்பிற்கு
அன்பளிப்பாய் பெற்றுக் கொண்டாயோ
அப்பாவி மனித வர்க்கத்தை.
அதோ அங்கே மழை தூவுகிறது
மனிதர்கள் குடைபிடித்து செல்கிறார்கள்
ஐந்தறிவுக்குட்பட்ட ஜீவன்கள் என்ன செய்யும் பாவம்
அதோ அங்கே காளான் குடைபிடிக்க
எறும்பது நனனையாது இருக்கிறது
ஜீவ காருண்யம் பரிணமிக்கிறது.
சின்ன வரிகளால் கருத்துத் தெளிவுறக் காண்பது  கவிதை
பெரிய வரிகளில் ஆழ்மனப்பிதற்றல்களை ராகத்தோடு
வெளிக்கொணர்வது பாடல்
உணர்வைத்தொட்டு உயிர் கலப்பது கவிதை
உள்ளத்தில் உறைந்து நெஞ்சில் நிற்பது பாடல்
சமூகத்தை சீர்திருத்தப்போனேன்

நான் சிர்திருத்தப்பட்டேன்
நடந்தவற்றையும் நடக்காதவற்றையும்

உருவகப்படுத்துவது கவிஞரின் எண்ணத்திறன்
புதிய புதிய வார்த்தைகளை தேடவேண்டும்
அதிலிருக்கும் புதினத்தைக் கண்டு
எண்ணக் களத்தில் பாய்ச்சி
எழுத்துக்கோர்வை சேர்க்க வேண்டும்
தன்னம்பிக்கை என்பது தாரகமந்திரம்
விவேகம் என்பது உயிர் மூச்சு
தெளிவு என்பது தீர்மானமாய் நடைபயின்றால் வெற்றி மட்டுமே!
என் தோட்டம்
எனது பதிமூன்றாம் வயதில் எனக்குள் ஏதோ மாற்றம்
என் இனிய தோட்டம் தன்னை தனக்குள்
ஊடுருவச் செய்த அற்புதத் தோட்டம் அது...
கற்பனைக்கு தீனி தந்த திரவியம்
மனதிற்கு தினம்  மகிழ்ச்சி அளித்த  தோட்டம்
உள்ளீடாய் உள்வாங்கி உரிமையோடு ஏந்திய தோட்டம்
ஏதேதோ செய்தி சொல்லி எனக்கு பிடித்தபடி சலசலப்பை தந்து
பாதை தடத்தை புரியவைத்த என்னை கவிஞர் ஆக்கிய
எனது ஆருயிர் தோட்டம்  

Friday 22 November 2013

முரண்பாடு
மனிதன் அரித்தான் கடல் அன்னையின் குழந்தைகளை

சுனாமி அழித்தது மனிதைன வித்துக்களை.
கருப்பு வெள்ளை படம் பார்த்து நாளாச்சு
கன்னிப் பென் மனம் நூலாச்சு(காதலனின் கண்கள்)