Pages

Friday 15 November 2013


ஒரு கவிஞர் எல்லா நிலைகளில் இருந்தும் கவி எழுத வேண்டும்
மனித உணர்வுகளையும் நவரச நிலைதனையும்  செதுக்கிடணும்
ஆழம் அறிந்து பூவில் பூகம்பமும், புயலுக்குள் மென்மையும்,
தேனில் துவர்ப்பும், இனிப்பில் கசப்பும், கரிப்பில் குளுமையும்,
தென்றலில் சூறாவளியும், கவலையில் இனிமையும்,
சோகத்தில் சுகமும், ஆண்மைக்குள்  பெண்மையும்,
பெண்மைக்குள் ஆண்மையும் நேர், நேர் ஆகவும்
எதிர் எதிர் ஆகவும்
அழகில் கோரமும், கோபத்தில் குணமும்,
இன்னும், இன்னும் மாற்றி சிந்நித்து இனம் பிரிப்பதே
ரசிப்பதே கவிகளுக்கு கொண்டாட்டம்
நட்டு நடப்பின் தாக்கத்தை ஏட்டில் உலாவ விடுவதே
கவிகளின் உயிர் நாடி
இயற்கையின் தாக்கத்தில் கவி மனது தினவு எடுத்து குதிக்கும்..
மாய பிறழ்வு மதிநுட்பத் தேர்வு அதிர்வு அமைதி வார்த்தை ஜாலங்கள் வார்த்திடும் புதினம்...
சிந்திக்காமல் பிறக்கும்,
சொற்கணை தெறிக்கும்,
கவி இதயம், எழுந்தும்,விழ்ந்தும், படிந்தும்,
பரந்தும், நிமிர்ந்தும், கணைக்கும்
சுருக்கமாக:- கவிஞர்கள்
காலச் சுழற்சியின் பிரதிபலிப்பே(இது என் கருத்து)  .
                                                             கவிஞர்-RK

No comments:

Post a Comment