Friday 18 January 2019
எண்ணற்ற விண்மீன்கள் ஏகாந்தலோகத்தில்சுழன்றாலும் என்னோடுகைகோர்த்து தொடரும் விடிந்தாலும்நிற்கும் விடிவெள்ளி நீயே.... திரும்பாமல்திசைமாறிச் சென்றால், வெறுப்பாகிப்போவேன்என்றா!கல்யாணப்பெண்ணாகநிற்க... என்னை கை பிடித்து காதல் ரசம் சொட்டச் சொட்ட ரசித்தாயே கனவில்... சண்டாளா / பெண்டாள வருவாயோ பெருமூச்சில் ஏங்கி?பனிச்சாரல்தூவ கனிச்சாரல்மேவ ஸ்வீட்ராஸ்க்கள் டே,ஸ்வீட்ராஸ்கள் ஸ்வீட்ராஸ்கள். டேஸ்வீட்ராஸ்கள் .செல்லம் என்றழைத்தாயே கை பேசிப் பேச்சில் .... மெல்லச்சரசரத்து, மேனிகிறுகிறுத்து, உள்ளம்குறுகுறுத்து, கண்ணும்கண்ணும்கலந்தது காதல்தீயில்தணிந்தது.. .இந்த; மண்ணில்என்சுவாசம் நீங்கும்வரை! உன்இணையாக,துணையாக வழிநெடுகநான்இருப்பேன் நீதோத்தாலும்,ஜெயித்தாலும் தோள்மீதுசாய்த்திடுவேன்' அந்தவானத்தில்மிதந்தாலும் வடிகஞ்சி குடித்தாலும் உன்னோடு பகிர்ந்திடுவேன் . 1to5.
Saturday 5 January 2019
Friday 4 January 2019
ஓட்டுக்கேட்டுவருவாக கும்பிடுபோட்டு... குடிசவாசல் நிலைப்படி தாண்டி சந்து,பொந்துதிரிவாக வாக்குச் சீட்டு சேகரிக்க? கூலக் கும்பிடக் கண்டு மயங்க மாட்டோம்புரியும்... . ஆனா! கரண்சி நோட்டப் பார்த்தா ஜொள்ளு வடிப்போம் தெரியும் உரிமை இழந்து ஓட்டவித்தா ஓட்டாண்டிதா புத்திகெட்டு சக்தி இழந்துபுலம்ப வேண்டுமா?/தூங்கியது போதும் தோழா! பதுங்கியது போதும் தோழா பகடைகளாய்கிடந்துவிட்டோம் ஓட்டுக்கு காசுவாங்கி.... குடி தண்ணி பஞ்சம் வந்தா யாரத் தேடுவோம் பள்ளமான சாலைகளமேவித் தர யாரக் கேட்போம்?கார்பரேட்டுக்காரணுங்க காலவச்சு நம்ம!விளைநிலத்த பாழடிச்சு விணை விதைதச்சாய்ங்க நஷ்ட ஈடுகேட்டுப்போனா கஷ்டம் மேலும்தொடரும், நோட்டநீட்டி ஓட்டுக்கேட்டுவந்தவுக ஒய்யாரம காருக்குள்ள ! கைய நீட்டி கேள்விகேட்டு தட்டிக்கேட்டா கம்பி எண்ணி நம்ம காலம்கழியும்; தூங்கியது போதும் தோழா ஒதுங்கியதுபோதும் தோழா ஓட்டுக்கு காசு கொடுத்தா தூக்கிப்போட்டு நெஞ்ச நிமிர்த்தி ஜனநாயகம் காக்க சபதம் எடுப்போம்.
மணமகள் வரவேற்பு!(தலைப்பு) ☝️ 💐💐🙏 🙏 குழு:- மணமகளே, மணமகளே, வா,வா,வா/வா,வா,வா! மாமியார்:- மகள் இடம் நிரப்பவந்தவளே "எங்கள்"வீட்டு குலமகளே நானும் ஒருநாள் மருமகளே! ஆத்திரம் அதிகாரம் என்னில் இருக்காது .... பருவத்தின்ஆசை பண்பாய்பேணுங்கள், குறை, நிறை கண்டு தவறாமல் ஒருவரைஒருவர்புரிந்துகொண்டு அகம் மகிழ்ந்து பாங்காய் குடும்பம் நடத்துங்கள், அறிவுள்ளகுழந்தை இரண்டு பெற்று இனிதாய் வாழ்ந்திடுங்கள் குழு:- மணமகளே,மணமகளே, வா,வா,வா /வா,வா வா நாத்தனார்;- மூத்தவர் அனுபவம் முன்வைத்து வரவுக்குள் செலவு செய்து வசந்தம் காணுங்கள், உறவுக்குள்உரிமை கொண்டு, நாத்தனாரை தோழியாக நினைப்பாய் ஆணவம்,அடக்கு முறை எங்களில்இருக்காது.... குழு ;- மணமகளே மணமகளே, வா,வா,வா /வா,வா,வா அன்பாய்நீ இருப்பாய் அழகாய் அரவணைப்போம் புதுஇடம்என்றும் புகழிடம்உனக்கு இதை புரிந்து அறிந்து நடந்திடுவாய் உன் தாய் தந்தைபாசம் என்றும்'உண்டு நல் புதுமை பல செய்து குடும்பப் பெறுமை காப்பாய் கூட்டுக் குடும்பம் களைந்திடாமல் கூடிமகிழ்ந்து வாழ்ந்திடுவாய், குழு:- மணமகளே,மணமகளே, வா,வா,வா / வா,வா வா. . .
தமிழா! தமிழா சங்கத்தமிழா, நம்மண்ணின்பண்பாடு மங்காதசிறப்போடு விளையாடு,விளையாடு ஜல்லிக்கட்டு எ,எஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டுஎ,எஜல்லிக்கட்டு வீரத்தமிழர் விளையாட்டு உலகம் எங்கும் நிலைநாட்டு வகைவகையாவரிசைகட்டி வாடிவாசல்தேடிவரும் காளைகளும் காளையரே ; உங்கவீரத்த எடைபோட எகிறித்தாவும் தில்லக்காட்டு , திமிலப்புடி, திமிறும்பாரு,தீண்டிப்பாரு ஜல்லிக்கட்டுஎ,எஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டுஎ,எஜல்லிக்கட்டு கருப்பசாமிகோயில்காளை கம்பீரமாமிரட்டும் சிவகங்கை சீமக்காளை சீறிப்பாயும் வருசநாட்டுசெவளைக்காளை செம;தூள்பறத்தும் துணிவக்காட்டு திமிலப்புடி,திமிரும்பாரு ஜல்லிக்கட்டுஎ,எஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டுஎ,எஜல்லிக்கட்டு சூறக்கோட்டக்காளை அதுகளமிறங்கிவந்தா கதிகலங்கும்பாரு, கொங்குநாட்டுமச்சக்காள அகங்காரசெறுக்கோடு நடைபோடும்!ஜல்லிக்கட்டுஎஎஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டுஎ,எஜல்லிக்கட்டு மணப்பாறைமயிலக்காள கோபக்காரக்காள... ரோசக்காரக் காளையரே! அரும்பு "மீச"முறுக்கிக்காட்டி துள்ளிக்கிட்டு ! சும்மா,குறும்போட; விளையாடு,விளையாடு ஜல்லிக்கட்டுஎ,எஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டுஎ,எஜல்லிக்கட்டு காங்கேயக்காரி சிலுப்பிக்கிட்டு' தகிடுதத்தம்போடவைக்கும் முறையோடமோதிப்பாரு வாலப்புடிக்காத, கொம்பத்தழுவாத, துள்ளிக்கிட்டு,திமிலக்கட்டி மவ(க)னே மல்லுக்கட்டு.... ஜல்லிக்கட்டுஎ,எஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டுஎ,எஜல்லிக்கட்டு நம் மண்ணின் பண்பாடு மங்காத சிறப்போடு விளையாடு,விளையாடு வீரத்தமிழன் விளையாட்டு உலகெங்கும் நிலைநாட்டு ஜல்லிக்கட்டுஎ,எ ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டுஎ,எஜல்லிக்கட்டு.