Pages

Wednesday 5 September 2018

🤔எல்லோருக்கும் எழுத்து வன்மை இருக்கிறது.....ஆனால் ! எல்லோரும்எழுத்தாளராக முளைவிட;😗 முயற்சிப்பதில்லை... .எல்லோருக்கும் சொல் வன்மை இருக்கிறது....ஆனால்! எல்லோரும் சொற்பொழிவாளராக; நிலைபட😉 முயற்சிப்பதில்லை.... எல்லோருக்கும் கலைத்திறமைஇருக்கிறது.. .ஆனால்! எல்லோரும் கலைஞராக ஐக்கியப்பட🤨 முயற்சிப்பதில்லை... எல்லோருக்கும் கவித்திறன் இருக்கிறது ஆனால்! உணர்ச்சித் துடிப்பில் மூல்கிவிட;😟 முயற்சிப்பதில்லை... எல்லோருக்கும் தொழில் சிந்தனைஇருக்கிறது ...ஆனால்! எல்லோரும்தொழில் அதிபராக முனைப்புடன்; செயல்பட😐 முயற்சிப்பதில்லை ....இன்னும் பிற துறைகளிலும் /எவர்ஒருவர் லட்சியத்தாகத்தோடு ? ஊண்,உறக்கத்தை பெரிது படுத்தாமல்.. கடுமையாக போராடி உழைத்து வாழ்கிறார்களோ ? அவர்கள் காலத்தின் சுவடுகளில்👣👣 அது,அதுவாகவே ஆகி தம்👀👁👁 அடையாளத்தை பதிக்கிறார்கள்.

Tuesday 4 September 2018

🙏🌹ஆசிரியரும் அன்னையே!👈 பெற்ற அன்னை பாலூட்டி சீராட்டினாள்...👉. பள்ளி அன்னைசொல்லூட்டி சீராக்கினார் ; ☝️ பெற்ற அன்னை மழலைமொழியை பாராட்டினார் !👆 பள்ளி அன்னைஉளரல் மொழியை மெருகூட்டினார்;🖐 பெற்ற அன்னை🤙 குதலைப்பேச்சிற்கு அகம்மகிழ்ந்தாள் ... பள்ளி அன்னை பிழைப்பேச்சு நீக்க அக்கறைகாட்டினார்;👌 பெற்ற அன்னை உடல்,உள்ளம் வளர செறிவூட்டினாள்...✊ பள்ளி அன்னை மனம்,அறிவு வளர உரம் ஏற்றினார்! 👍 .பெற்ற அன்னை வளமைக்கு வழிகாட்டினாள்...👊 பள்ளி அன்னை வாழ்வில்உயர வழிகாட்டி னார் ; 🤲 பெற்ற அன்னை அனைவரிடமும் அன்பு காட்டி னாள்... பள்ளி அன்னை அனைவரிடமும் தாய்மை காட்டினார்;👋 பெற்ற அன்னை பிறப்பின் மகத்துவம் போதித்தார்..🤚 பள்ளி அன்னை பிறப்பில் சமத்துவம் போதித்தார்;🤝 நதி என்ற என்னை... இருகரைகளாக! 🤛🤜 பெற்ற அன்னையும் ,பள்ளி அன்னையும் சர்வ👏 வள்ளமையுள்ளவளாக/ வள்ளமைகொண்டவனாக... என்வீட்டிற்கும்,இந்நாட்டிற்கும் சமூகத்திற்கும் செதுக்கி தந்துள்ளனர்.

Tuesday 21 August 2018

கண்ணீர் அஞ்சலி!💐 அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்கு!.... அளப்பரிய ஆற்றலரை இழந்து வீட்டோம் .... நல்ல தொரு நாயகரே ! நாடாண்ட வல்லவரே! சிறப்புற நூல்கள் பல படைத்த...சீர்திருத்த செம்மலாக திகழ்ந்தவரே ... இலக்கண இலக்கிய உலகில் நல்கவிதைகள் கட்டுரை ஆக்கங்கள் சமைத்த பன் முக வித்தகரே...இனிய சுபாவம் இந்திய நாட்டு வளர்ச்சி,ஒற்றுமை, வளமைக்காகவும்...உழைத்த உத்தமரே ,செயல் வீரரே ,தவப்புதல்வனே .... தூங்காமல் தூங்கி ஓய்வெடுக்க சென்றீரே .... நீங்கா புகழ் ,நிலைத்த அருள்ளோடு விடை பெற்ற அன்னாரின்தூய ஆன்மா தன் மக்களைஎன்றும் ஆசீர்வாதிக்கட்டும்.😣😔😪 .kalaiarasi.. ( R.k)

Monday 6 August 2018

பெரும் மழைக்கிடையிலும்         சற்றே வெயில் கண்ட!     தினங்கள்...                                 ஊதைக் காற்றுக்கிடையிலும் சற்றே உஷ்ணம் தீண்டிய?   நாட்கள்... வாடைக்குளிருக்கிடையிலும் ஆனந்த போர்வை விரித்த! விடியல்கள்....                           சகதியின் தடத்திற்கிடைலும்   சற்றே சரளையில் நடந்த! பொழுதுகள்....                                  கடும் கோடைக்கிடையிலும்      சற்றே சாரல் நனைத்த?             வசந்த கால நிகழ்வுகள். R.k .

Friday 3 August 2018

1990. .ல் எழுதினேன். என் உள்ளம் அறியாமல் வீணாய் உழல்கின்றாய்.... உன் அனுமதி இல்லாமல் எந்தப் புகழும் தேவையில்லை உன் இழப்பில் என் பாதை தெளியும் என்றால்... எந்தப் பயணமும் தேவையில்லை... உன் மரணத்தில் என் வாசல் திறக்கும் என்றால் .... அந்த விடியல் தேவையில்லை... என் மனம் அறியாமல் புதிராய் விரிகின்றாய்... சூழ்சியில் வெற்றி தேவையில்லை... ஓர் உயிர் வதைத்து நான் வாழ்ந்திடும் சாத்தியமில்லை உள்ள ஆழம் தெரியாமல் ... எனை இம்சித்து உனையும் அழிக்கிறாய் ஆனந்தம் இதில் ஏது?... குடும்பம் இல்லாமல் லட்சியம் தேவையில்லை.... என் எண்ணம் உண்மை எனில் ஏற்றம் ஓர்நாள் கிடைக்கும் ... மனம் கள்ளம் இல்லாமல் களக்கம் காண்கிறது... இந்த நிலை நீங்கும் வரை எனை நீ உணரும் வரை... சுதந்திரம் எனக்குத் ்தேவையில்லை .
முரண்! ஒரே குடும்பத்தில் இருக்கிறார்கள்... பிரிவினை வாதத்தோடு! .. வெவ்வேறு ஊர்களில் வசிக்கிறார்கள் ? மனம் ஒன்று பட்டு.
1992...நடு நிசிப் பேய்கள்! தந்தை குடித்தானென்று.... தாய் மன்றாடி போராடி இறந்துவிட.... தந்தை குடித்துவிட்டு அடித்தானென்று தமயன் வீட்டை விட்டு ஓடிவிட... தந்தை குடித்துவிட்டு கும்மாளம் போட... பாது காப்புத்தேடி வெளியேறினாள்் பெண் ஒருத்தி ... ஐயகோ! .. நடுநிசி பேய்களிடம் மாட்டி தினம் ஒரு மிருகத்திற்கு.... இரையானாள்.
வெற்றிடம்! வெற்றிடம் வென்ற வெற்றி! என் தந்தையுண்டு... என் வெற்றிக்கு முன்னே!                                                          என் தாய் உண்டு... என் வெற்றிக்கு ஊக்குவிப்பு ?                                                 என் சகோதர சகோதரிகள் உண்டு...                                            என் வெற்றிப் புகழிற்கு கணவர் தான் காரணம்...                         என் வெற்றி உயர்வுக்கு !    ..                   என் நண்பர்கள் உதவி... என் வெற்றிக் களிப்பிற்கு ;                                      .     ...... என் காதல் வாழ்வுதான் காரணம்...       என் வெற்றிக்கு ஊன்றுகோள் " ...   .. என் குழந்தைகள்...என்று பலரும் கூறுவார்கள்... ஆனால்! .. . .. ... .. .........?/.என் வெற்றிக்கு காரணம் அயற்சியில்லாத. முயற்சி மற்றும் ஒரு சிலர்.
அந்தி நேர ஆதவனிற்கோர் ஆசை ததும்பும் ஆயிரம் முத்தம்(அல்லது)... மலை முகிலின் வகிடுகளுக்குள் நீ மறைந்து போனதாலே... உன் அழகில் நான் மயங்கி உறங்காமல் தவித்திருக்கேன்... அந்தி நேரம் கூண்டைத் தேடி போகும் பறவைக் கூட்டம் ஒன்று கூறிச் சென்ற. வாழ்தொலிக்கு ஆசை ததும்பும் அன்பு முத்தம்... உன் நினைவில் நான் மலர்ந்து உறங்காமல் விழித்திருக்கேன்...
அழுகையை தூக்கிப் போட்டுவிட்டேன்... அது கிழிந்த உடைஎன... சிரிப்பை சூடிக்கொண்டேன் புத்தம் புது பூக்கள் என... வெறுப்பை ஒதுக்கிவிட்டேன் வெறும் குப்பை என... சகிப்பை எடுத்துக்கொண்டேன் என் அணிகலன் என... சங்கடத்தைப் போக்கிவிட்டேன் அது சகதி என ... மனவலியை புறந்தள்ளி மன வலிமையை எற்றுக்கொண்டேன் என் வாழ்வை வளமாக்கும் என.
அழுகையை தூக்கிப் போட்டுவிட்டேன்... அது கிழிந்த உடைஎன... சிரிப்பை சூடிக்கொண்டேன் புத்தம் புது பூக்கள் என... வெறுப்பை ஒதுக்கிவிட்டேன் வெறும் குப்பை என... சகிப்பை எடுத்துக்கொண்டேன் என் அணிகலன் என... சங்கடத்தைப் போக்கிவிட்டேன் அது சகதி என ... மனவலியை புறந்தள்ளி மன வலிமையை எற்றுக்கொண்டேன் என் வாழ்வை வளமாக்கும் என.

Sunday 29 July 2018

1990ஆம் ஆண்டு எழுதியது (பாடல் )கவி மழையை நான் பொழிய கலை மகளின் அருள் வேண்டி நான் பாடுவேன்.... அருள் மழையை நீ தர அழைக்கின்றேன்... அன்பின் உருவே வருவாயா? வையகத்தில் வாழுகின்ற! உயிர்களிற்கு அறிவென்ற. செல்வம் தந்து காப்பவள் நீயே.... வாழ்வென்னும் ஏட்டில் மனம்என்னும் வீட்டில் வந்து அருள் புரிவாயே ....1,2... சொல் என்ற அம்பெடுத்து செயுள் ஒன்றை உருவாக்குவேன்... தழில் மீது ஆணை என் தாய் மீது ஆணை அழியாத புவி மீதும் ஆணை .... கல்விக்கு அதிபதி நீயே! கடமைக்கு தலைவி வேள்விக்கு அருள்வாய் வெண்தாமரைப் பூவில் வாசம் செய்யும் சரஸ்வதிதேவீ... வீணையின் நாதத்தால் உலகாழ்கிறாய் எனக்குள்ளே போராட்டம் ஏன் வந்ததோ? எதற்கிந்த நாடகம் நீகூறு தாயே.... பாரோரின் அன்புக்கும் பண்புக்கும் உரித்தானவள்... பரிதவிக்கும் என் நெஞ்சை பார்ப்பாயே நீ... கற்பனை ஜாலத்தை ஏன் விதைத்தாய் பதில் கூறு.1to6.
1986.,ஆம் ஆண்டு எழுதியவை தாலாட்டு.... ஆராரோ ஆரிரரோ ஆரிராரிரோ.... ஆராரோ ஆரிரரோ ஆரிராரிரோ... தாயாக மாறிவிட்டேன்.... சேயாக மனம் இருக்கு! .. ... தாலாட்டுப் பாடவா ஆரமுதே நீ உறங்கு ... பாரதியார் பாடல்தனில்... பற்றுக் கொண்ட பாவை இவள் கண்ணதாசன் கவி மழையில் கட்டுண்ட பேதை இவள் ....விடி வெள்ளி நீ இருக்க... வினை என்னை என்ன? செய்யும் ஆராரோ ஆரிரரோ...ஆரிராரிரோ ,,.ஆராரோ ஆரிரரோஆரிராரிரோ... அழியாத புவி மொழியாம் தமிழாக. வாழ்ந்திடுவாய் ! அன்பாக நான் பாட கண்ணாவே நீ உறங்கு... செம்பவள இதழாலே செந்தமிழை நீ பேசு...... காலையிளம் கதிரழகே"! .1to5 ரிபிட்... சிந்தைக்கு விருந்தாகும் நல் நூலை நீ படித்து வாழையடி வாழையாய் வந்த. பல அறிஞர்களின் அறிவுரையை நீ கேட்டு அந்த வழி நடந்திடுவாய்... ஆராரோ ஆரிராரோ ஆரிராரிரோ... ஆராரோ ஆரிராரோ... ஆரிராரிரோ... கனியாத காய்ஒன்று பழமாக. உருமாறி அறியாத.... பருத்தில் அரணாக உன் வரவு அழகான நல் உறவு... ஆதரவாய் நான் இருப்பேன் கோடை வெயில் எனைத் தாக்க .... கொட்டும் மழை நீ ஆனாய்"! நீரூற்றுப் போல நீயும் நிலையான புகழ் பெறுவாய்... குற்றால அருவி என கொஞ்சு தமிழ் மொழி போற்று.1,to5.

Friday 27 July 2018

அரவாணி(பரதம்) ..(2000..) .(நட்டுவாங்கம் ) எழுதியது .. எந்தன் நெஞ்சில் ஏனிந்த சோகம் கண்கள் இரண்டும் கார் மேக அருவி... அரவாணி என்று அலட்சியம் செய்தீர்! ...சிறு நெறுஞ்சிப் பூ ஒன்று குரல் கொடுத்துப் பாடும்....ஓர் ஜீவன் உயிர் மருகி இடை சாய்ந்து ஆடும்... தை தக்க தைதக்க தகதீம்தகதீம் தரிகிட தீம் தரிகிடதீம்.... (நட்டுவாங்கம்). வரைமுறை அற்ற வார்த்தை வன்முறை பல நூறு கண்டோம்! அலை ஆடும் கடல் கூட எங்கள் கதை கேட்டால்.... ஒரு நொடியும் அடங்கிவிடும் அங்கே... பெற்றெடுத்த உறவுகள் துச்மென இகழ்ந்து ஒதுக்கி விடும் சோகம் ஒருவருக்கும் வேண்டாம்....தைதக்க. ..(.நட்டுவாங்கம் ) அர்ஜுனனும் அரவாணியாக. உருமாறி வாழ்ந்தார்.... இக்கோலம் யார் தந்தது... அனுதாபம் எதற்கு? கருவறைக்குள் ஏன் நாங்கள் சென்றோம் கல்லறையில் தினம் வாழத்தானா?... இப் பிறப்பு நாங்கள் என்ன. விரும்பியதது உண்டோ....விலகியது மனசங்கள் வெறுத்ததுந்தன் குணங்கள்... அவமதிப்பு நிகழ்வு!அலட்சியப் போக்கு! கேலிக்கு ஆளானோம் கேள்விக்கு ஆளானோம்.... தன் மானம் எங்களிற்கும் உண்டு.... ஒவ்வொரு படைப்பிலும் ஓர் புனிதம் இருக்கும்! .. முள்மீது நடந்தோம் வலி இல்லை தானே!சொல் என்ற அம்பு தைத்து உயிர் சோர்ந்து போனோம். உலகத்தில் வாழ்ந்திடும் உரிமை மட்டும் சூறையிட. வேண்டாம்.தைதக்க தைதக்க(நட்டுவாங்கம்). .

Thursday 26 July 2018

நண்பா ! ( 2000 )எழுதினேன் நண்பா அழகை ரசித்திடு அடிபணியாதே ஆண்மைக்கு அழகல்ல... காட்டு மலர்கள் வீட்டுக்கு உதவாது அது கண்களைப் பறிக்கும் நம் கருத்துக்கு இசையாது ... நண்பா நித்திரை காவு செய்யும் மின்மினி பூச்சி கண்டு உன் விடியலை இழக்காதே... வீணாய் அலைந்து நிம்மதி தொலைக்காதே... 2. காதல் என்ற மாயைக்குள் சிக்க வைத்துப் பறந்திடும் பட்டுப் பூச்சி பின்னால் திரியாதே... அக அழகைப்பாரடா... பசுந்தோல் போர்த்தி புலி இருக்கும் புலித்தோல் போர்த்திய... பசு பாரு நண்பா! வரவுக்கு ஏற்ற செலவு செய்யும் பெண்மை கைபிடா .... உடற்கட்டு என்பது சிலகாலம் உண்மை அன்பு பல காலம் வாழ்க்கை பாதையில் இன்பம் பிறக்க. தகுதிக்கு ஏற்ற இடம் தேடு! நண்பா! . அருவியில் ஓடும் மலரைப் பிடிக்க. .. ஆசைப்பட்டால் அதுஆபத்தடா மின்னலைப்பிடித்து... சிறை செய்ய உனக்கு திறமையுண்டா... நித்திரை  களைந்து நிம்மதி தொலையுமடா... விணாய் வாழ்வை பணயம் வைக்காதே நண்பா! பாலையில் தோன்றும் கானல் நீருக்கு தாகம் தணியாது ... ஏக்கம்கொண்டு அழியாதே பாசம் காட்ட குடும்பம் உண்டு நெருப்புக்கூட அழகாய் சுடர் விடுது... அதை தீண்டிப் பார்க்க. ஆசை கொண்டால் அது நியாயமில்லை அது நியாயமில்லை.1to4ரிபிட்.

Tuesday 24 July 2018

என் அண்ணா! (என் அண்ணன்) (2006)வருடம் எழுதியவை. நயவஞ்சக உலகில் நாணயமானவராக- என் அண்ணா.... அநீதிக் கூட்டத்தில் நீதிமானாக- என் அண்ணா... பொய்யர்கள் மத்தியில் மெய்யாக-என் அண்ணா... தீயவர்கள் நடுவில் நல்லவராக-என் அண்ணா... பணநிலையில் சற்றுதாழ்ந்தாலும் தன் நிலையில் உயர்ந்தவராக.? என் அண்ணா... பிறரைஏற்றி விடும் ஏணியாக என் அண்ணா... எல்லோறுக்கும் கொடுத்து என்றுமே கர்ணணாக- என் அண்ணா....(என்அண்ணன்)
நினைவுகள்"! (2000)ஆம்ஆண்டு எழுதினேன்... வாழ்ந்திடு பாடலும் இந்த....காலகட்டத்தில் எழுயது... காலச் சுவடுகளில் நீ மட்டும் நடந்து வந்த பாதை... நினைவுப் பதியத்தில் பதிந்ததடி சகியே"!.... உள்ளக்கிடக்கையில் உன்னுடன் இருந்த தினம் உறைந்து கிடக்கிறது பரந்தவெளி பார்க்கும் திசை கடந்து வந்த பாதை விரிந்திருக்கு உணர்வில்... தேங்கிக் கிடந்த எண்ணத்திலே!. உன் சுவாசம் கலந்திருக்கு சகியே... புன்னகைப் பூவாய் புத்தொளி தந்தாய்.. நம்பிக்கை இழந்த பொழுதுகளில் ... நர்த்தனம்மிட்டு நாயணமிசைத் தாய்... புத்துயிரே புல்வெளியில் அமர்ந்த சுகம் அனைத்தும் நாம் பகிர்ந்த கதை .... அவ்வப்பொழுது 1to4ரிபிட்...கோபக் கொந்தளிப்பில் பட்டுச்சிதறிக் கிடந்தேன்... கொஞ்சும் மொழிகளில் சாந்தப் பார்வையில் சாய்த்தாய்... அஞ்சிச்சோர்ந்தேன் ஆதரவாய் வந்து அனைத்துப் பிழைகளை நீக்கினாய்.... உயிர் கலசத்தில் கிடந்த களையினை செதுக்கினாய் வசந்த மழை பொழிந்தஅந்த நிகழ்வுகள் ... ஆயுள் முழுவதும் கூடவரும்.1.to4.ரிபிட்.
பாடல்.....ஒற்றுமை! ... (2000ஆம் ஆண்டில் எழுதினேன்) தங்க நிலவுகளே...நீங்கள் சண்டையிடலாமா.... ஒற்றுமை தானே பண்பாடு நம் பாரதம் வகுத்த வாய்ப்பாடு.... கூட்டுக்குடும்ப நிலைப்பாடு உலகம் கண்டு வியப்புறும்.. வெள்ளி நிலவுகளே... உங்களில் ஜாதிப்பிரி வினை ஏன்? அன்புப் பிணைப்பினிலே நம் பயணம் தொடருட்டும்... ஒவ்வொரு உயிரிக்கும் வாழ்ந்திட உரிமையுண்டு.... பழி பாவச் செயல்களிலே... நீங்கள் ஈடுபடலாமா"!... சாந்தம் கொண்டு பாருங்கள் அதில் எத்தனை சுடர் ஒளி... ஆனந்தம் அங்கே தான்... விட்டுக் கொடுத்தளிலே!... நம் இன்பம் பிறக்கட்டும்... பிள்ளை நிலவுகளே !..... உங்களில் மூர்க்க குணம் ஏனோ? தீய செயல்களிளே நீங்கள் ஈடுபடலாமா?... பல் வேறு மனிதற்கும் ஓர் திறமை உள்ளிருக்கும்... நாம் வாழப் பிறந்தவர்கள்... உலகம் ஆளப் பிறந்தவர்கள்.. அன்பு நிலவுகளே நீங்கள் கோபப்படலாமா.... இதயத்தில் காழ்ப்பு நிலை ஏனோ?... நல் சிந்தனை செய்துவிட்டு வாழ்வை வென்று... புரட்டிடலாம் எத்தனை மொழிகள் இருப்பினும்.... நாம் நேசக் கரங்கள் நீட்டிடுவோம் 1,to7ரிபிட்.
வாழ்ந்திடு வாழ்ந்திடு வாழ்ந்திடு வாழ்க்கை ஒரு முறைதான்... வாழும் நாளில் நிறைவாய் வாழ்ந்து விடு... செடிகள் கூடபதியம் போட்டால் பல முறை வாழ்கிறது... பல முறை வாழ்கிறது... எதிர்த்திடு எதிர்த்திடு எதிர்த்திடு தீமைகளை... சுதந்திரக் காற்றை சுவாசிக்க துணிந்திடு துணிந்திடு துணிந்திடு துணிவாய் வென்று விடு... பறவைகளிற்கு இருக்கும் சுதந்திரம் மனிதற்கு இல்லையே....நம்பிக்கை என்ற சக்தி கொண்டால் நாளும் சிறந்திடலாம்... நம் புத்திக்கு எட்டிய நல்ல செயலைச் செய்வதற்கு ... எத்தனை தடைகள் வந்தாலும் ! தகர்த்திட கிளர்ந்து எழு.... விதி என்ற போர்வையில் வீணாய் காலம் தாழ்த்தாமல் ஒவ்வொரு நொடியும்... ஒவ்வரு யுகமாய் மதித்து! . வாழ்ந்துவிடு.... 1.to5.ரிபிட்.

Saturday 21 July 2018

வலிகள் தான் உறுதிக்கு உரமாகிறது.... பிழைகள் தான் பிரிதொரு நாளில் தெளிவைத் தருகிறிது... சோதனைகள் தான் வாழ்கையில் பக்குவமாக பயணிக்க. உதவுகிறது... தோல்விகள் போராடக் கற்றுத்தருகிறது .... வெற்றிகள் வாழ்ததற்கான. .. நிறைவைத் தருகிறது
பள்ளிக்கூடம் பலருக்கு பாடம் சொல்லித் தருகிறது... பள்ளிகூட வெளியிடை சிலருக்கு பாடம் கற்றுத் தருகிறது!இது குறையா? ....அது நிறையா?.
சுயமதிப்பீடு செய்தாலே! பிறரை தாக்கும் எண்ணம் வராது.... சுயஇழப்பீடு தெரிந்தாலே!. வாழ்வை தெளிவாக்கிக் கொள்ளளாம்.
புரிதல் இல்லாமல் நெடுந்தூரம் போகிறோம் ...ஒரு குடிலில் இருந்து கொண்டு அறிந்து திரும்பி வந்தால்.... (மனம்) ஒரு குடில் பல குடில்களாக!.
ஆகாயத்தில்நொடிக்கு நொடி மாறும் மேகச் சுவடுகள் போலத் தான் நமது வாழ்வும்.

Friday 20 July 2018

நேசம் விட்டு தேசம் செல்வதற்காக வருந்தவில்லை நான்.... அதை சரி செய்யத்தான் கைபேசி இருக்கிறதே.. .நான் நட்டுவைத்த செடிகளோடு உணர்வுப்பூர்வமாக. . ..உரையாட முடியாமல் விட்டுச்செல்கிறேன்.... அதற்காக! வருந்துகிறேன்
நெஞ்சினிக்க கொஞ்சிப் பேசி சிறுகச் சிறுக..... ஓடி ஒளிந்து மறைந்து ஊடல் செய்து விளையாடியவள் இன்று முழுவதுமாக... ஏனோ அவளைக் காணவில்லை? வாட்டத்துடன் நான்?(பௌர்ணமி முதல் அமாவாசை வரையுள்ள நிகழ்வுகள்)
வேர்கள் மௌனமாக இருப்பதனால் தானோ ? இலைகள் அசையாமல்...(இருக்கிறது)

Monday 4 June 2018

பாலியல்கொடுமை; பூ மலர்ந்தது அழகாக. புயல் பறித்தது கொடூரமாக😢