Pages

Thursday 26 July 2018

நண்பா ! ( 2000 )எழுதினேன் நண்பா அழகை ரசித்திடு அடிபணியாதே ஆண்மைக்கு அழகல்ல... காட்டு மலர்கள் வீட்டுக்கு உதவாது அது கண்களைப் பறிக்கும் நம் கருத்துக்கு இசையாது ... நண்பா நித்திரை காவு செய்யும் மின்மினி பூச்சி கண்டு உன் விடியலை இழக்காதே... வீணாய் அலைந்து நிம்மதி தொலைக்காதே... 2. காதல் என்ற மாயைக்குள் சிக்க வைத்துப் பறந்திடும் பட்டுப் பூச்சி பின்னால் திரியாதே... அக அழகைப்பாரடா... பசுந்தோல் போர்த்தி புலி இருக்கும் புலித்தோல் போர்த்திய... பசு பாரு நண்பா! வரவுக்கு ஏற்ற செலவு செய்யும் பெண்மை கைபிடா .... உடற்கட்டு என்பது சிலகாலம் உண்மை அன்பு பல காலம் வாழ்க்கை பாதையில் இன்பம் பிறக்க. தகுதிக்கு ஏற்ற இடம் தேடு! நண்பா! . அருவியில் ஓடும் மலரைப் பிடிக்க. .. ஆசைப்பட்டால் அதுஆபத்தடா மின்னலைப்பிடித்து... சிறை செய்ய உனக்கு திறமையுண்டா... நித்திரை  களைந்து நிம்மதி தொலையுமடா... விணாய் வாழ்வை பணயம் வைக்காதே நண்பா! பாலையில் தோன்றும் கானல் நீருக்கு தாகம் தணியாது ... ஏக்கம்கொண்டு அழியாதே பாசம் காட்ட குடும்பம் உண்டு நெருப்புக்கூட அழகாய் சுடர் விடுது... அதை தீண்டிப் பார்க்க. ஆசை கொண்டால் அது நியாயமில்லை அது நியாயமில்லை.1to4ரிபிட்.

No comments:

Post a Comment