Pages

Sunday 29 July 2018

1986.,ஆம் ஆண்டு எழுதியவை தாலாட்டு.... ஆராரோ ஆரிரரோ ஆரிராரிரோ.... ஆராரோ ஆரிரரோ ஆரிராரிரோ... தாயாக மாறிவிட்டேன்.... சேயாக மனம் இருக்கு! .. ... தாலாட்டுப் பாடவா ஆரமுதே நீ உறங்கு ... பாரதியார் பாடல்தனில்... பற்றுக் கொண்ட பாவை இவள் கண்ணதாசன் கவி மழையில் கட்டுண்ட பேதை இவள் ....விடி வெள்ளி நீ இருக்க... வினை என்னை என்ன? செய்யும் ஆராரோ ஆரிரரோ...ஆரிராரிரோ ,,.ஆராரோ ஆரிரரோஆரிராரிரோ... அழியாத புவி மொழியாம் தமிழாக. வாழ்ந்திடுவாய் ! அன்பாக நான் பாட கண்ணாவே நீ உறங்கு... செம்பவள இதழாலே செந்தமிழை நீ பேசு...... காலையிளம் கதிரழகே"! .1to5 ரிபிட்... சிந்தைக்கு விருந்தாகும் நல் நூலை நீ படித்து வாழையடி வாழையாய் வந்த. பல அறிஞர்களின் அறிவுரையை நீ கேட்டு அந்த வழி நடந்திடுவாய்... ஆராரோ ஆரிராரோ ஆரிராரிரோ... ஆராரோ ஆரிராரோ... ஆரிராரிரோ... கனியாத காய்ஒன்று பழமாக. உருமாறி அறியாத.... பருத்தில் அரணாக உன் வரவு அழகான நல் உறவு... ஆதரவாய் நான் இருப்பேன் கோடை வெயில் எனைத் தாக்க .... கொட்டும் மழை நீ ஆனாய்"! நீரூற்றுப் போல நீயும் நிலையான புகழ் பெறுவாய்... குற்றால அருவி என கொஞ்சு தமிழ் மொழி போற்று.1,to5.

No comments:

Post a Comment