Pages

Saturday 28 December 2013

பரதம்
                         
பெண்: தனன தீம்த தீம்த தீம்தன
       தனன தீம்த தீம்த தீம்தன
       தனன தீம்த தீம்த தீம்தன
       தீம்தன.................
       பரதக் கலைதனைப் பறைசாட்ட வந்தேன்
       பாவனையில் சேதி ஒன்று சொன்னேன்
       பொருள் பதிந்ததா இதன் அர்த்தம் புரிந்ததா?
       நேசமுடன் நெஞ்சுருக்கி இணை சேரவேன்டும்
       இயக்கங்கள்  தினந்தோறும் அழகன் அடி ஆக
       கருணை செய் இறைவா
       தாம் தரிகிட தீம் தரிகிட தோம் தரிகிட நம் தரிகிட
       தத்தத் தரிகிடதித்தித் தரிகிட
       தோம் தரிகிட தித்தித் தரிகிட
       தோம் தோம் தரிகிட நம் நம் தரிகிட
       தா..... தீ.... தோம்... நம்நம் தரிகிட
       தா....தீ...தோம்...நம்நம் தரிகிட
       சின் முத்திரைக் கொண்டு
       சிற்றிடை சுழன்றாடுது
       சிறுவிரல் கொண்டு தாங்கிடு
       பக்கத்தில் நீ அமர்ந்து பருகிட வேண்டும்
       வெண்ணிலவு போல உள்ள வட்டமுகம்
       வாடி நின்றதேனோ....
       வாச மலர் இங்கிருக்கு வண்டுக்கு தடையில்லை
       வந்திடு தேவா
       தகிட தகிட தோம்கிட நம்கிட தகதிரிகிடதக
       தத்தத் தகசும் ததிந்த நகசும்
       தத்தத் தகசும் ததிந்த நகசும்
       மோகனப் பார்வையில் மோகினி மயங்கினேன்
       மது கொஞ்சும் அதரம்
       மது உண்ண வரவேண்டும்
1-4 ரிபீட்
 வேகம்
பெண்:
      புதுமை பெண்ணாய் புறப்படுவேன்
      புயலை எதிர்த்து நின்றிடுவேன்
      புத்துயிர் பெற்று வாழ்ந்திடுவேன்
      புனிதம் உயர்வாய் காத்திடுவேன்
      கடமை ஆற்றக் கண்ணாக
      காரியம் ஆற்ற உறுதி கொள்வேன்
      கவலை எனக்கில்லை போடாபோ
      கண்ணீர் வற்றிய விழியதுவே
      கொல்லன் பட்டறை உளி இதுவே
      தனிமை எனக்கென்றும் புதிதல்ல
      தவிப்பும் எனக்கொரு துடிப்பல்ல
      பலமுறை கண்டேன்
      பலமுறை கன்டேன் காயங்களை
      அக்கினிச் சிறகுகள் உள்நின்று
      பாறை இதயம் இதுவாச்சு
      பயணம் இனியும் தெளிவாகும்
      தேடல்கள் அதிலே துணையாகும்
      இருக்கும் வரையிலும் வாழ்ந்திடுவேன்
      எதிர்த்து நின்றால் எதுவும் தூசாகும்
      எண்ணம் உயர்ந்தால் எதுவும் வசமாகும் 
                         பருவம்
வேகம்
பெண்:நெஞ்சம் என்ன மஞ்சமா?
      தஞ்சம் கொள்ள வேடந்தாங்களா
      சாலை முக்கில் ஈக்களாய்
      சுற்றி வரும் பாய்களா?
      நான் எல்லோரா ஓவியம்மா
      எல்லாரும் தீண்டிப்பார்க்க
ஆண்:ஓ ரோஜாவே ராஜாவைக் குறீவை
     அழகுக்கு அடிமை அறிவுக்கு தலசாய்
     மற்றவர்கள் பாடிக்கார்டு
     நட்பாக நாங்கள் வந்து
     ரிஜிஸ்ட்ரேஷ்ன் மேரேஜிற்கு
     சாட்சி நிற்போம் தில்லாக
பெண்:அப்ளிக்கேஷன் பலநூறு
      அத்தனையும் டுபாகூறு
      பெண்ணாய் பிறந்தது பாவமா?
      பதினேழில் காதலா?
      வாழ்க்கைப் பாதை மோதலா?
      பாசம் வைத்த பெற்றோரை
      மோசம் செய்வது முறையா
ஆண்:கடமை  உணர்வு நெஞ்சில் இருக்கு
    கட்டுப்பாடு கையில் இருக்கு
    தொட்டுப் போட உடையா நீ
    துட்டுப் பார்த்து வாழ்வில் இணைவோம்
    செலக்ஷன் மட்டும் செய்து வைப்போம்
    வரதட்சனை இல்லை
    திருமண சீர்கள் இல்லை
1-6ரிபீட்
ஆண்:வாலிப வயசு கோலாட்டம்
      இது டீனேஜீ பூபாளம்
      ஜாலிமூடூ ஒரு சிக்னல் தாடி
      சிறுபுண்ணகை போதும்
      புதிதாய் பிறப்போம்.

Thursday 26 December 2013

கண் விழித்து பார்த்தேன்
காழை கண்விழித்துப் பார்த்தேன்
சோலை சிரிக்கும் சப்தம் கேட்டேன்
தண்ணீரில் என்பிம்பம்
தகதகக்கும் ஒர் அழகு

அதிகாலைச் சூரியனின்
எழில் கோலம் என்னைக் கொஞ்சம் வருடி
கருவிழியில் சிறு மணியில்
ஆயிரம் மாயை ஜொலிக்கிறதே!

புல்லின் மீது பனிநீர்
படுத்துறங்கும் அழகை
மலர்கள் கூட்டம் என்னை
வாழ்த்துப்பாடும் ஓசை
தென்றல் கீற்று தேகம் தொட்டு
பார்க்கும் சுகந்தம்

வாய்க்கால் வரப்பில் வண்டினங்கள்
கூத்துப்போடக் கண்டேன்
விடியல் பார்த்த பறவை
சிறகை விரித்துப்போன அழகை
நேற்றுப் படர்ந்த துன்பம்
இன்று விலகிப் போனதெங்கே
புத்துணர்ச்சி பெற்றேன்

பூவில் நூறு வாசம் நூகர்த்தேன்
புதிதாய் பிறந்து வந்து நின்றேன்
புன்னகை சேர்ந்து வந்து உதிர்த்தேன்.
அணைப்பட்டி ஆஞ்சநேயா!
எங்கள் அணைப்பட்டி ஆஞ்சநேயா!
மக்கள் குறையை நீ தீர்ப்பாய்
எங்கள் மன குறையை நீ தீர்ப்பாய்
பரந்த வானம் போல பூமிகாஞ்சு கெடக்குது
ஆத்துப்படுக மணலை எல்லாம் காத்துல வருது
காத்திருந்தோம், காத்திருந்தோம்
வர்ணனிற்காக

அந்த மழை தேவனை
அந்த மழை தேவனை அழைத்துவாயா ஆஞ்சநேயா!
தண்ணீருக்குக்காக உயிரினமும் வாடிவதங்குது
புல் பூண்டு எல்லாமே காஞ்சு கெடக்குது
எங்கள் தாகத்தை தீர்த்துவிடு ஆஞ்சநேயா!
மக்கள் பஞ்சத்தை போக்கிவிடு ஆஞ்சநேயா!
பஞ்ச பாண்டவர் வந்து தாங்கிய வனமல்லவா!
ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்தவரும் பீம்னல்லவா!
சக்க்தியுள்ள தெய்வம் எங்கள் ஆஞ்சநேயா!

மகாலிங்க மலையோனே!
மக்கள் குறைநீ தீர்ப்பாய்
முவ்வாறு சேர்கின்ற இடமல்லவா!
முக்கூடலில் முத்தான உள்பாதம்
பற்றுகின்ற பக்தர்ல்லவா!
நாவல்பழ தல விருட்ச நாயகனே!
எங்கள் நம்பிக்கை வீண்போகா
அருள் செய்வாய்.
பாடல்
சிந்தனை பறவை சிறகை விரித்தது
சிறிதாய் சிறிதாய் கலந்து விரிந்தது
உயர உயர பறக்கத் துடிக்கிறதே....
வானம் தொட்டு விட்டு
வந்து அமர்கிறதே...

கடலை தொட்டுவிட்டு தாண்டிப்போகிறதே....
மலையில் பயணித்து  மலரின் வாசம் நுகர்கிறதே...
வலையில் சிக்கிவிட்டு வந்து சோர்கிறதே...
மழையில் நனைந்திட்டு மலர்ச்சி கொள்கிறதே...
தரை தொட்டு ஊர்ந்து
தலைகளை கணித்து இதமாய் காற்றை
கையில் பிடித்து வந்து எழுதச் சொல்லி
என்னை நிந்தித்ததே....

சந்தித்த தருணம் தடங்களை மனதில்
பதிய வைத்து பதியமிடச் செய்கிறதே...
சிந்தனை பறவை சிறகை விரித்தது
சிறிதாய் சிறிதாய் கலந்து விரிந்தது
நவரச உணர்வை ரசித்துப் படித்துவிட்டு
ருசித்து கூடுவந்து அமர்கிறதே....
பக்கத்தில் வந்து கவிதை கதைபேசி
கருவை உயிர் பெறச்செய்கிறதே...
2000 வாக்கில் ஈர நிலம் பட சூட்டிங்க் நேரம்
அப்பொழுது பாரதிராஜாவை நிலக்கோட்டை அருகில் அணைப்பட்டி கல்லூத்தில் சந்தித்தேன் இயக்குனர் சிகரம் இமயம் முன் என்னால் எதுவும் பேச முடியவில்லை ஓரிரு வார்த்தை மட்டும் பேசிவிட்டு வந்தேன் அதற்குபின் மறுநாள் கிட்டத்தட்ட இருநாட்களில் 150 பாடல் வரை தோன்றியது என்னால் அச்சிந்தனையை அடக்க மறக்க முடியாமல் எழுதிக்கொண்டே இருந்தேன் அவற்றை நீக்க பின் தூக்கமாத்திரை  போட்டு தூங்கி அந்த கவி ஊற்றை வற்றவைத்தேன்...
அவற்றில் பல பாடல்களை உங்களோடு பகிற்கிறேன்.

Wednesday 18 December 2013

விடியல் என்றோ?
கடமை ஆற்றுமோடி;
அடி நெஞ்சக்கூவல்
கவிதை அடங்குமோடி
உள்நெஞ்சக்கூற்று
காலத்தை வெல்லும் கவிக்குழந்தை
என்று மூப்பெய்தாமல்....
நான் தரித்த உயிர்க்குழந்தை
மூப்பெய்தி போனாலும்
அகிலம் உள்ள மட்டும்
கவிதை பூப்பெய்தும்
கடமை உள்ளழவு
வாழ்வென்னும் அச்சு முறியாது
தூங்காம்ல் விழித்திருக்கும்
தூரத்து விண்மீன் போலே
எனது உயிர் கவிதைகள்
காலத்தை வென்று
நடைபோடும் “ஒர்” நாளில்.
வயிறு முட்டக் குடித்துவிட்டு
மண்ணில் புரண்டெழுந்தான்
கட்டியவன்...
மானமென்று ஏதுமில்லை
மரியாதை என்று யாதுமில்லை
வறுமை அருகில் வர
வளமை வற்றிவிட...
இடைப்பட்ட வருடம்
அப்படியும் இப்படியுமாய்
இம்சையில் உருண்டோடின
காலங்கள்...
ஐந்து வயதில் பையன்
இரண்டு வயதில் மகள்
காலனை கட்டியனைத்து
முத்தமிட்டான் கட்டியவன்....
வயிற்றுப்பிழைப்புத்தேடி
பயணித்தாள் அவள்
இரண்டு பிஞ்சுகளை
வளர்க்கவே வாழ்கிறோம்
என்ற பொருப்புணர்வோடு.

சரிதானா?
நாட்டுக்குள் போர்க்களம்
சிலர் வீட்டுக்குள் அமர்க்களம்
ஆட்சியாளர்கள்
பாதுகாப்பு வளையத்திற்குள்
பாதுகாப்பாய் பத்திரமாய்
அப்பாவிகள்
பதற்ற வளையத்திற்குள்
பரிதவிப்பாய் பயமாய்
ஒவ்வொரு உயிருக்கும்
வெவ்வேறு விலை உண்டோ?
மதுவே உன்னால் கண்டது!
குணம் மாறி குலம் வீழ்ந்தது
அன்பு களைந்தது;ஆணவம் எழுந்தது
அறிவுப்பசி சென்று மிருக இச்சை துளிர்ந்தது
பணம் கரைந்தது வறுமை தாண்டவமாடியது
கொஞ்சு மொழி மறந்து
கொச்சை சொல்லாய்
பச்சையாய் வார்த்தைக்கணை தெறித்தது
விதியை நொந்து வீணாய் உன்னதம் களைந்து
பாசம் கடந்து பாதை மாறி
மோசமாய் போனது வாழ்வுநிலை
பணிவு இழந்த பயணம்
தடம் புரண்டது தினத்துளிகள்
குடும்ப எண்ணம் சிதறி
குடியே! உலகமானது
நரம்பு முறுகேற
நாற்றத்தில் புரள்கிறது பகுத்தறிவு
ஆறறிவு ஜீவிதம்
அறநெறி மறந்து
சகதியில் உழல்கிறது
மது நேராக சிறுமூளை சென்று
அதன் பாதிப்பாக தடுமாற்றம்
வீர நாடை தளர்ந்து போனது
விவேகம் மறந்து புழுதிச் சேற்றில்
திளைக்கிறது
மதுவே உன்னால் கண்டது இதுவே!
தவறே செய்யாமல் மனிதன் இருக்கமுடியாது
பொய்யே சொல்லாமல் மனிதன் இயங்கமுடியாது
தப்பை தப்பித் தப்பித் தப்பாய்
செய்வதுதான் தவறு...
பிறருக்கு தண்டனையாய்
போகாதவரை தவறல்ல...
மாது சுகம் தான்
நம் பணம் கரையாதவரை!
மது இனிது தான்
அதற்கு அடிமையாகாதவரை
ஊது குழல் ஒருபோதைதான்
உயிருக்குப் பாதகம் வராதவரை..
எல்லைக்கோடு வகுத்து
எல்லைத்தான்டத வரை
எல்லாத் தவறும் மாற்றக்கூடியதுதான்
நல்ல செயலோ கெட்ட செயலோ
அதற்கு அடிமையாகாதவரை
வாழ்க்கை கரைகடந்து பயணிக்கும்.

விதவைச் சடங்கு!
சூடிவிட்டு அழிக்கும் சூறையாடல்
உணர்வை காயப்படுத்தும் அத்துமீறல்
இதயத்தை ரணமாக்கும் வன்முறைச் செயல்
ஒதுக்கி வைக்கும் தீண்டாமைச் செயல்
உணர்ச்சிப் போரிடல் ஒருபுறம்
இகழ்ச்சி பேரிடர் மறுபுறம்
பெண்ணிற்க்கு பெண்ணே எதிரி
இது ஒரு சாட்சி
ஆண்கள் துணை இழந்தால் என்ன பெயர்
இவ் இழி செயலிற்கு விடிவு எப்போது
வேடிக்கைப் பொருளாய் உணர்வு
உயிர்நிலை ஆக்குவது
தடை செய்யப்பட வேண்டும்.
விதவை என்ற சொல் நீங்க வேண்டும்
வேதனைப் படுத்தும் பதம் எதற்கு?
சக மனுசி....
நிமிர்ந்து வாழ்வார்கள் நிம்மதியாக.
           கேள்!
ஆசிரியரிடம் கேட்கத்தவறியதால்
படிப்பை இழந்தேன்....
அம்மாவிடம் கேட்கத்தவறியதால்
பண்பை இழந்தேன்...
அப்பாவிடம் கேட்கத்தவறியதால்
வழ்க்கைப் பாதையை இழந்தேன்...
காதலியிடம் கேட்கத்தவறியதால்
காதலை இழந்தேன்.