Pages

Tuesday 3 December 2013

ஆண் முன்னேற்றம்!
ஆணவத்தின்
அடையாளம் அல்ல...
ஆண் முன்னேற்றம்;
அடங்கமறுப்பது அல்ல...
ஆண் முன்னேற்றம்;
அநாகரீகத்தை கூறுவது அல்ல...
ஆண் முன்னேற்றம்;
ஆயுதமேந்துவது அல்ல...
ஆண்முன்னேற்றம்;
தான்தோன்றியாக திரிவது அல்ல...
ஆண் முன்னேற்றம்;
தீயபழக்கம் தொடர்வது அல்ல...
ஆண் முன்னேற்றம்;
அடிமைப்படுவதும் அல்ல
அடிமைப்படுத்துவதும் அல்ல...
ஆண் முன்னேற்றம்;
அன்புடன் பெண்மையில்
ஐக்கியமாவதுதான்...
ஆண் முன்னேற்றம்.

No comments:

Post a Comment