Pages

Thursday 12 December 2013

காட்சிப்பதிவு!
கோடீஸ்வரி சொகுசுக்காரில்
பயனிக்கிறாள்
வீதியோரம்”ஒர் காட்சி”
ஒரு வயது முதிர்ந்த
ஏழ்மையான தம்பதியினர்
கையேந்தி பவனில்
உணவு உண்கின்றனர்
மனைவிக்கு புரைபோகிறது
கணவர் தலைதட்டுகிறார்
சாப்பிட்டு எழுந்த பின்
கணவர் தடுமாற...
மனைவி கைபிடித்து தாங்க
அவர்களுக்குள் இருக்கும் அந்த
இணக்கம் கண்டு அவளுக்குள் ஏக்கம்.

No comments:

Post a Comment