Pages

Wednesday 18 December 2013

மதுவே உன்னால் கண்டது!
குணம் மாறி குலம் வீழ்ந்தது
அன்பு களைந்தது;ஆணவம் எழுந்தது
அறிவுப்பசி சென்று மிருக இச்சை துளிர்ந்தது
பணம் கரைந்தது வறுமை தாண்டவமாடியது
கொஞ்சு மொழி மறந்து
கொச்சை சொல்லாய்
பச்சையாய் வார்த்தைக்கணை தெறித்தது
விதியை நொந்து வீணாய் உன்னதம் களைந்து
பாசம் கடந்து பாதை மாறி
மோசமாய் போனது வாழ்வுநிலை
பணிவு இழந்த பயணம்
தடம் புரண்டது தினத்துளிகள்
குடும்ப எண்ணம் சிதறி
குடியே! உலகமானது
நரம்பு முறுகேற
நாற்றத்தில் புரள்கிறது பகுத்தறிவு
ஆறறிவு ஜீவிதம்
அறநெறி மறந்து
சகதியில் உழல்கிறது
மது நேராக சிறுமூளை சென்று
அதன் பாதிப்பாக தடுமாற்றம்
வீர நாடை தளர்ந்து போனது
விவேகம் மறந்து புழுதிச் சேற்றில்
திளைக்கிறது
மதுவே உன்னால் கண்டது இதுவே!

No comments:

Post a Comment