Pages

Wednesday 18 December 2013

போர்கால குற்றம்!
சட்டத்திற்கு அப்பாற்ப்பட்ட
நாட்டில் எத்தனை குற்றவாளிகள்
என எண்ணிக்கொண்டு வாருங்கள்
என் எண்ணம் சொல்கிறேன்
தாய் தந்தையை தவிக்கவிட்டு
காணாதிருப்பவர்
விபத்தில் ஒர் உயிர் துடிக்க
அதை கண்டும் கடப்பவர்.
பிறர் கஷ்டம் பார்த்து ஏளனம்
செய்பவர்
சக மனிதனின் ஏற்றத்தாழ்வை
எள்ளினகைப்பவர்
முன்னவிட்டு பின்ன பேசி
மனக்காயம் செய்பவர்
தானும், குழம்பி
பிறரையும் குழப்பும் குதர்க்கக்காரர்கள்
அதிர்சி தகவல்களை
அள்ளிவீசி வாழ்வுபயம்
உருவாக்குபவர்கள்
சாலையோரத்தை
கழிப்பிடமாக்குபவர்கள்
திறமையாளர்களை
அதிகார பலத்தோடு அடக்குபவர்கள்
அன்பு என்னும் பிடியில் இடுக்கி
வளரவிடாமல் முடக்குபவர்கள்.

No comments:

Post a Comment