Pages

Tuesday 21 August 2018

கண்ணீர் அஞ்சலி!💐 அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்கு!.... அளப்பரிய ஆற்றலரை இழந்து வீட்டோம் .... நல்ல தொரு நாயகரே ! நாடாண்ட வல்லவரே! சிறப்புற நூல்கள் பல படைத்த...சீர்திருத்த செம்மலாக திகழ்ந்தவரே ... இலக்கண இலக்கிய உலகில் நல்கவிதைகள் கட்டுரை ஆக்கங்கள் சமைத்த பன் முக வித்தகரே...இனிய சுபாவம் இந்திய நாட்டு வளர்ச்சி,ஒற்றுமை, வளமைக்காகவும்...உழைத்த உத்தமரே ,செயல் வீரரே ,தவப்புதல்வனே .... தூங்காமல் தூங்கி ஓய்வெடுக்க சென்றீரே .... நீங்கா புகழ் ,நிலைத்த அருள்ளோடு விடை பெற்ற அன்னாரின்தூய ஆன்மா தன் மக்களைஎன்றும் ஆசீர்வாதிக்கட்டும்.😣😔😪 .kalaiarasi.. ( R.k)

Monday 6 August 2018

பெரும் மழைக்கிடையிலும்         சற்றே வெயில் கண்ட!     தினங்கள்...                                 ஊதைக் காற்றுக்கிடையிலும் சற்றே உஷ்ணம் தீண்டிய?   நாட்கள்... வாடைக்குளிருக்கிடையிலும் ஆனந்த போர்வை விரித்த! விடியல்கள்....                           சகதியின் தடத்திற்கிடைலும்   சற்றே சரளையில் நடந்த! பொழுதுகள்....                                  கடும் கோடைக்கிடையிலும்      சற்றே சாரல் நனைத்த?             வசந்த கால நிகழ்வுகள். R.k .

Friday 3 August 2018

1990. .ல் எழுதினேன். என் உள்ளம் அறியாமல் வீணாய் உழல்கின்றாய்.... உன் அனுமதி இல்லாமல் எந்தப் புகழும் தேவையில்லை உன் இழப்பில் என் பாதை தெளியும் என்றால்... எந்தப் பயணமும் தேவையில்லை... உன் மரணத்தில் என் வாசல் திறக்கும் என்றால் .... அந்த விடியல் தேவையில்லை... என் மனம் அறியாமல் புதிராய் விரிகின்றாய்... சூழ்சியில் வெற்றி தேவையில்லை... ஓர் உயிர் வதைத்து நான் வாழ்ந்திடும் சாத்தியமில்லை உள்ள ஆழம் தெரியாமல் ... எனை இம்சித்து உனையும் அழிக்கிறாய் ஆனந்தம் இதில் ஏது?... குடும்பம் இல்லாமல் லட்சியம் தேவையில்லை.... என் எண்ணம் உண்மை எனில் ஏற்றம் ஓர்நாள் கிடைக்கும் ... மனம் கள்ளம் இல்லாமல் களக்கம் காண்கிறது... இந்த நிலை நீங்கும் வரை எனை நீ உணரும் வரை... சுதந்திரம் எனக்குத் ்தேவையில்லை .
முரண்! ஒரே குடும்பத்தில் இருக்கிறார்கள்... பிரிவினை வாதத்தோடு! .. வெவ்வேறு ஊர்களில் வசிக்கிறார்கள் ? மனம் ஒன்று பட்டு.
1992...நடு நிசிப் பேய்கள்! தந்தை குடித்தானென்று.... தாய் மன்றாடி போராடி இறந்துவிட.... தந்தை குடித்துவிட்டு அடித்தானென்று தமயன் வீட்டை விட்டு ஓடிவிட... தந்தை குடித்துவிட்டு கும்மாளம் போட... பாது காப்புத்தேடி வெளியேறினாள்் பெண் ஒருத்தி ... ஐயகோ! .. நடுநிசி பேய்களிடம் மாட்டி தினம் ஒரு மிருகத்திற்கு.... இரையானாள்.
வெற்றிடம்! வெற்றிடம் வென்ற வெற்றி! என் தந்தையுண்டு... என் வெற்றிக்கு முன்னே!                                                          என் தாய் உண்டு... என் வெற்றிக்கு ஊக்குவிப்பு ?                                                 என் சகோதர சகோதரிகள் உண்டு...                                            என் வெற்றிப் புகழிற்கு கணவர் தான் காரணம்...                         என் வெற்றி உயர்வுக்கு !    ..                   என் நண்பர்கள் உதவி... என் வெற்றிக் களிப்பிற்கு ;                                      .     ...... என் காதல் வாழ்வுதான் காரணம்...       என் வெற்றிக்கு ஊன்றுகோள் " ...   .. என் குழந்தைகள்...என்று பலரும் கூறுவார்கள்... ஆனால்! .. . .. ... .. .........?/.என் வெற்றிக்கு காரணம் அயற்சியில்லாத. முயற்சி மற்றும் ஒரு சிலர்.
அந்தி நேர ஆதவனிற்கோர் ஆசை ததும்பும் ஆயிரம் முத்தம்(அல்லது)... மலை முகிலின் வகிடுகளுக்குள் நீ மறைந்து போனதாலே... உன் அழகில் நான் மயங்கி உறங்காமல் தவித்திருக்கேன்... அந்தி நேரம் கூண்டைத் தேடி போகும் பறவைக் கூட்டம் ஒன்று கூறிச் சென்ற. வாழ்தொலிக்கு ஆசை ததும்பும் அன்பு முத்தம்... உன் நினைவில் நான் மலர்ந்து உறங்காமல் விழித்திருக்கேன்...
அழுகையை தூக்கிப் போட்டுவிட்டேன்... அது கிழிந்த உடைஎன... சிரிப்பை சூடிக்கொண்டேன் புத்தம் புது பூக்கள் என... வெறுப்பை ஒதுக்கிவிட்டேன் வெறும் குப்பை என... சகிப்பை எடுத்துக்கொண்டேன் என் அணிகலன் என... சங்கடத்தைப் போக்கிவிட்டேன் அது சகதி என ... மனவலியை புறந்தள்ளி மன வலிமையை எற்றுக்கொண்டேன் என் வாழ்வை வளமாக்கும் என.
அழுகையை தூக்கிப் போட்டுவிட்டேன்... அது கிழிந்த உடைஎன... சிரிப்பை சூடிக்கொண்டேன் புத்தம் புது பூக்கள் என... வெறுப்பை ஒதுக்கிவிட்டேன் வெறும் குப்பை என... சகிப்பை எடுத்துக்கொண்டேன் என் அணிகலன் என... சங்கடத்தைப் போக்கிவிட்டேன் அது சகதி என ... மனவலியை புறந்தள்ளி மன வலிமையை எற்றுக்கொண்டேன் என் வாழ்வை வளமாக்கும் என.