Pages

Friday 3 August 2018

1990. .ல் எழுதினேன். என் உள்ளம் அறியாமல் வீணாய் உழல்கின்றாய்.... உன் அனுமதி இல்லாமல் எந்தப் புகழும் தேவையில்லை உன் இழப்பில் என் பாதை தெளியும் என்றால்... எந்தப் பயணமும் தேவையில்லை... உன் மரணத்தில் என் வாசல் திறக்கும் என்றால் .... அந்த விடியல் தேவையில்லை... என் மனம் அறியாமல் புதிராய் விரிகின்றாய்... சூழ்சியில் வெற்றி தேவையில்லை... ஓர் உயிர் வதைத்து நான் வாழ்ந்திடும் சாத்தியமில்லை உள்ள ஆழம் தெரியாமல் ... எனை இம்சித்து உனையும் அழிக்கிறாய் ஆனந்தம் இதில் ஏது?... குடும்பம் இல்லாமல் லட்சியம் தேவையில்லை.... என் எண்ணம் உண்மை எனில் ஏற்றம் ஓர்நாள் கிடைக்கும் ... மனம் கள்ளம் இல்லாமல் களக்கம் காண்கிறது... இந்த நிலை நீங்கும் வரை எனை நீ உணரும் வரை... சுதந்திரம் எனக்குத் ்தேவையில்லை .

No comments:

Post a Comment