Pages

Wednesday 5 September 2018

🤔எல்லோருக்கும் எழுத்து வன்மை இருக்கிறது.....ஆனால் ! எல்லோரும்எழுத்தாளராக முளைவிட;😗 முயற்சிப்பதில்லை... .எல்லோருக்கும் சொல் வன்மை இருக்கிறது....ஆனால்! எல்லோரும் சொற்பொழிவாளராக; நிலைபட😉 முயற்சிப்பதில்லை.... எல்லோருக்கும் கலைத்திறமைஇருக்கிறது.. .ஆனால்! எல்லோரும் கலைஞராக ஐக்கியப்பட🤨 முயற்சிப்பதில்லை... எல்லோருக்கும் கவித்திறன் இருக்கிறது ஆனால்! உணர்ச்சித் துடிப்பில் மூல்கிவிட;😟 முயற்சிப்பதில்லை... எல்லோருக்கும் தொழில் சிந்தனைஇருக்கிறது ...ஆனால்! எல்லோரும்தொழில் அதிபராக முனைப்புடன்; செயல்பட😐 முயற்சிப்பதில்லை ....இன்னும் பிற துறைகளிலும் /எவர்ஒருவர் லட்சியத்தாகத்தோடு ? ஊண்,உறக்கத்தை பெரிது படுத்தாமல்.. கடுமையாக போராடி உழைத்து வாழ்கிறார்களோ ? அவர்கள் காலத்தின் சுவடுகளில்👣👣 அது,அதுவாகவே ஆகி தம்👀👁👁 அடையாளத்தை பதிக்கிறார்கள்.

Tuesday 4 September 2018

🙏🌹ஆசிரியரும் அன்னையே!👈 பெற்ற அன்னை பாலூட்டி சீராட்டினாள்...👉. பள்ளி அன்னைசொல்லூட்டி சீராக்கினார் ; ☝️ பெற்ற அன்னை மழலைமொழியை பாராட்டினார் !👆 பள்ளி அன்னைஉளரல் மொழியை மெருகூட்டினார்;🖐 பெற்ற அன்னை🤙 குதலைப்பேச்சிற்கு அகம்மகிழ்ந்தாள் ... பள்ளி அன்னை பிழைப்பேச்சு நீக்க அக்கறைகாட்டினார்;👌 பெற்ற அன்னை உடல்,உள்ளம் வளர செறிவூட்டினாள்...✊ பள்ளி அன்னை மனம்,அறிவு வளர உரம் ஏற்றினார்! 👍 .பெற்ற அன்னை வளமைக்கு வழிகாட்டினாள்...👊 பள்ளி அன்னை வாழ்வில்உயர வழிகாட்டி னார் ; 🤲 பெற்ற அன்னை அனைவரிடமும் அன்பு காட்டி னாள்... பள்ளி அன்னை அனைவரிடமும் தாய்மை காட்டினார்;👋 பெற்ற அன்னை பிறப்பின் மகத்துவம் போதித்தார்..🤚 பள்ளி அன்னை பிறப்பில் சமத்துவம் போதித்தார்;🤝 நதி என்ற என்னை... இருகரைகளாக! 🤛🤜 பெற்ற அன்னையும் ,பள்ளி அன்னையும் சர்வ👏 வள்ளமையுள்ளவளாக/ வள்ளமைகொண்டவனாக... என்வீட்டிற்கும்,இந்நாட்டிற்கும் சமூகத்திற்கும் செதுக்கி தந்துள்ளனர்.