Pages

Monday 16 December 2013

கதை:-முயலும்காக்காயும்
             எதுசொர்க்கம்!
         
ஒரு வீட்டில் முயல் வளர்க்கும் பண்ணையில் இருந்து மூன்று முயல்களை வாங்கி வளர்த்தார்கள்...

அந்த முயல் குட்டிகளை செல்லமாக பராமரித்து அதற்குத் தேவையான பிடித்த பழங்களை, இழைகள், தழை, கொட்டை,  விதைகள் என தந்து பிரியத்துடன் பராமரித்துவர அன்பாய் கொஞ்சி,கொஞ்சிபேசி சேட்டைகள் செய்தபோது செல்லமாக தட்டி வெகு ஜாக்கிறதையாக பதுகாத்து வளர்த்துவர அந்த முயலில் ஒன்று படுசுட்டி...
ஒரு நாள் அந்த வீட்டின் கொல்லைபுறம் சென்றுவிட அங்கு ஒரு காக்கைக் கூட்டம் பார்த்துவிட்டது...
கொளுகொளுவென உள்ள அந்த முயலைத் தாங்கள் சாப்பிட எண்ணிவிரட்ட எத்தனிக்கையில் ஒரு காக்கை கூறியது...ம் இப்ப நாம துரத்தினோம் என்றல் அது பழையபடி வீட்டிற்குள் ஓடிவிடும்...
அதனால் அதனை கொல்லைபுறம்விட்டு அப்பால வரச்செய்து நாம் உணவாக உண்ணலாம் எனக்கூறியது.
ஆமாம்!வீட்டுகார அம்மாவும் பார்த்தா நம்மளை துரத்தி விரட்டிவிடுவார்கள் என்றது மற்றொரு காக்கை.
காக்கைக் கூட்டம் கண்டதும் அந்த முயல் குட்டி கொல்லைப்புறம் விட்டு வீட்டிற்குள் ஓட எத்தனிக்கையில் அங்கிருந்த ஒரு காக்கை முயலை கூப்பிட்டது முயல் பயந்து போய் எட்டிப்பார்த்தது
ம்..வா எங்களைப் பார்த்து ஏன் பயப்படுகிறாய் என்றது
ம்கூம் வரமாட்டேன் உங்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது...
வெளி உலகை பார்... எவ்வளவு பரந்தவெளி, பச்சைபுற்கள், காடுமலை என இயற்கை தந்த இடம் உள்ளது நீயோ ஏன் அந்த வீட்டிற்குள் அடங்கி முடங்கிக் கிடக்கிறாய். என்றது ஒரு காக்கை!
ம்..அப்படியா என்றது அந்த குட்டி முயல்
ஏய்! எங்கபோன பியூட்டி... என்று அந்த அம்மா வந்து காக்கை கூட்டத்தை விரட்டிவிட... அந்த முயல்குட்டி வீட்டிற்குள் வந்து மற்ற முயல்களை அழைத்து காக்கை கூறியவிசயத்தை சொல்லியது. மற்ற முயல்கள் முதலில் மறுக்க... அப்பறம் பார்க்கலாம் என்றதுகள். அந்த சுட்டி முயலோ நான் முதலில் வெளி உலகைக் காணப்போகிறேன் நீங்கள் வந்தால் வருங்கள் வரட்டிபோங்கள் என்றது.
ம்... அம்மா,அய்யா அனைவரும் நம்மை பெற்ற பிள்ளையை போல கவனிக்கிறார்கள். குளிருக்கு நம்மை ரூமில் வைத்து பாதுகாக்கிறார்கள் வெக்கை தனிய காத்தாடி போடுடகிறார்கள் சத்துள்ள கூழ் ஊற்றுகிறார்கள் நல்ல உறைவிடம், உணவு, பாதுகாப்பு இருக்கும் போது இதைவிட வேறு சொர்க்கம் நமக்கு எதுக்கு என்றதுகள் மற்ற இரண்டு முயல்களும்.
சரி சரி நான் நாளை பயணப்படப் போகிறேன் வெளி உலக சொர்க்கம் காண... என்றது சுட்டி முயல் மீண்டும்.
மறு நாள்பொழுது புலர
அந்த வீட்டு எஜமானி அம்மா அசந்த நேரம் பார்த்து சுட்டி முயல் கொல்லைப்புறம் எட்டிப்பார்த்தது...
அங்கே காக்கைகள் மரத்தில் பேசிக்கொண்டிருந்தது இதன் காதில் விழ கூர்ந்து கவனித்தது. இன்று நமக்கு அற்புத வேட்டை இருக்கிறது ...ஒரு காக்கை அந்த கொளுத்த முயல் வந்துவிடும் ஆஹா என்றது மற்றொரு காக்கை. ஆமா! அந்த முயல் நம்மிடம் இருந்து தப்பிவிட்டால் என்றது இன்னொரு காக்கை தப்பமுடியாது அப்படி தப்பிவிட்டால்  அதன் கதி அதோகதிதான்...
தெருவிற்கு சென்றால் நாய் துரத்தும், காணும் வழியில் மனிதர்கள் துரத்துவர் அப்படியே காட்டிற்கு சென்றாலும் மயில்கள், பெரிய பாம்புகள், பூனைகள் மற்றும் கழுகுக் கண் பார்வையில் இருந்தும் தப்பிக்க முடியாது. அப்புரம் தப்பித்தாலும் இருட்டுக்குள் மறைந்து, ஒழிந்து, பயந்து, பதுங்கித்தானே வாழவேண்டும் இதன் இனங்கள் அப்படித்தானே வழ்கிறது...
சரி சரி அந்த முயல் வந்துவிடப் போகிறது பேச்சை நிறுத்து என்றது மற்றொரு காக்கை!

சுட்டிமுயல் கேட்டுவிட்டு ஓ! இவ்வளவு ஆபத்து எதிரிகள் வெளியில் இருக்கிறார்களா! நம்மை கொத்தி திண்கத்தான் அந்தக் காக்கைக்கூட்டம் நயவஞ்சகமாய் பேசி அழைத்தா... ஆஹா! எவ்வளவு பெரிய தவறு செய்ய நினைத்தோம் என்று எண்ணியவாறே வீட்டிற்குல் ஓடிவிட்டது. சகதோழர்கள் என்ன என்ன என்று வினவ ம்... உங்களை எல்லாம் விட்டுப்பிரிய மனம் வரவில்லை அதான் போகவில்லை என்று கூறி சமாளித்தது சுட்டிமுயல்.  

No comments:

Post a Comment