Pages

Tuesday 3 December 2013

பெண்முன்னேற்றம்!
பெண்முன்னேற்றம்;
நவநாகரீக மங்கையாக
உலா வருவது அல்ல...
பெண்முன்னேற்றம்;
அகந்தையுடன் திரிவதென்ற
அர்த்தம் அல்ல...
பெண் முன்னேற்றம்;
எப்படியும் அடைய வேண்டும்
என்ற முயற்சி அல்ல...
பெண் முன்னேற்றம்;
ஆடம்பரச் செயல் அல்ல...
பெண் முன்னேற்றம்;
தடம் விட்டு தடம் பாயும்
சாடைப் பேச்சு அல்ல...
பெண் முன்னேற்றம்;
காழ்ப்புணர்ச்சி கொண்டு
வெதும்புவதும் அல்ல...
பெண் முன்னேற்றம்;
நம் பாரதப் பண்பு காத்து
பரிணமிப்பதுதான் பெண்ணே!


No comments:

Post a Comment