Pages

Friday 22 November 2013


பாக்தாத் நகர வீதியில் அழகிய இரு பறவைகள் பேசிக் கொள்கிறது! (சதாம் உசேன் கால கட்டம்)

இருபறவைகள்!
(உரையாடல்)
முதல் பறவையின் பெயர் அஹிம்சை
 இரண்டாவது பறவையின் பெயர் சமாதானம்
அஹிம்சை: ஐந்து அறிவுக்குட்பட்ட நம்மை போன்ற படைப்புக்கள் எவ்வளவோ சிறந்தது...
நாம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உணவு,உரைவிடம்,காற்று, நீர்மட்டும் பயன்படுத்துகிறோம்....
அளவுக்கு அதிகமாக எதையும் சேர்த்து வைப்பதில்லை
இயற்கை தந்த செல்வங்களை அளவுடன் பயன்படுத்துகிறோம்
ஆனால்! மனிதர்கள் என்ற பிறவிகளுக்கு கடவுள் ஆறாவது அறிவை ஏன் கொடுத்தாரோ?
ஆக்கச் செயலிற்கு அறிவை பயன்படுத்தாமல் அழிவு பாதைகளில் செல்கிறார்கள்...
சமாதானம்: ஆமாம் அங்கே பார்!
(பாக்தாத்) அழகான மாட மாளிகை கூட கோபுரங்கள் மனிதர்கலே ஆக்கிவிட்டு அவ்வினமே அழிக்கும் கொடுஞ்செயல்களை பார்!
அஹி:ஆம் ஓலக் குரல்கள் கேட்கிறது கை கால் உடல் உறுப்புகளை இழந்து மனிதர்கள் சிதறிக்கிடப்பதை பார்க்க பாவமாகதான் உள்ளது என்ன செய்வது ?
சமா:அவர்கள் ஆக்கவும் செய்கிறார்கள் அழிக்கவும் செய்கிறார்கள் ஆனால் மடிந்த ஒரு உயிரை மீட்டுத் தர முடியுமா?
ம். தேவைக்கு அதிகமாக பொருள் தேடுகிறார்கள் அவர்கள் அழிவதுடன் மற்ற ஊர்களையும் அல்லவா அழிவுப்பாதைக்கு கொண்டுவிடுகிறார்கள் இயற்கை படைத்த காற்றையும்,நீரையும் கூட இடங்களையும் வனங்களையும் மாசுபடுத்துகிறார்கள்.
அஹி: ஆமாம் கடல் நீரில் கூட எண்ணெய் கழிவுப் பொருள்களை சிந்தி கொட்டி எத்தனை உயிர்களை பழி ஆக்குகிறார்கள் மரம் செடி கொடிகளையும் அழித்து பூமிக்கு வரவேண்டிய மழையை தடுக்கிறார்கள்  நம் பூமிக்கு கவசமாக இருக்கும் ஓசோன் படலத்தில்  ஓட்டை விழுந்தது கூட இவர்களால் தான்...பார்! அக்கினி வெயில் எப்படி தகிக்கிறாது    என்று!சமா: பகுத்தறிவை பாதகச்செயலிற்கு அற்பணிக்கிறார்கள் இவ்வினத்தால் இங்கு அனைத்து உயிர்களும் கூட இல்லாமல் போய்விடும் வேடிக்கைதான் வேதனையும்கூட்த்தான்
அஹி:பின்னர் பூமியே பயனற்ற பாலைவனமாய் ஆகப்போகிறது சடலங்களாய் மடிந்த மக்கிய இடமாக இருக்க போற காலம் வெகுதூரத்தில் இல்லை...
சமா:ம். என்ன செய்வது அங்கு பார் அதிகாலை சூரியன் எவ்வளவு அழகாக தன் செங்கதிர்களை விரித்து தன் கடமையைச் செவ்வனே செய்கிறது இதனை ரசிக்க முடியாமல் அணு ஆயுத ஓசை இடியை விட அதிகமாக அப்பப்பா நம்மை கலக்கமுற செய்கிறது.
அஹி: சரி சரி வா கரும் புகை சூல்கிறது இவ்விடத்தை விட்டு அகன்று விடுவோம்  என்னால் மூச்சு விடக்கூட சிரம்மாக உள்ளது.
சமா: ஆமாம் எனக்கும் இதய சுவாசம் நின்றுவிடும் போல் உள்ளது வாழும் வரை நம் உயிரை பாதுகாக்க வேறு இடம் செல்வோம் வா வா
அஹி: அப்புறம் மனிதன் என்ற இனத்திற்கு ஒரு அறிவைஅதான் பகுத்தறிவை நல் வழிக்கு பயன்படுத்த வேண்டும் என்று நாம் இறைவனிடம் பிரார்த்திப்போம்.

(காலம்:இரு பறவைகளும் அவ்விடத்தை விட்டு வேறு இடம் செல்கின்றன. அங்கேயாவது மனிதர்கள் அப்பறவைகளை நிம்மதியாக வாழவிடுவார்களா.)

No comments:

Post a Comment