Pages

Friday 17 January 2014

                                          சோகம்
மனம் போராடி போராடி சோர்கின்றது
தினம் சோகத்தில் விடியல்கள் பிறகின்றது
மரம் பூக்காமல் காய்க்காமல் காய்கின்றது
ஏனிந்த இழிவான வாழ்வு
எதைத்தேடி பயணங்கள் நடைபோடுமோ?
என் அகராத்தில் இன்பத்தின் எல்லைகள் கானல் நீரோ
முள்மீது பாதைகள் விரிகின்றது
சொல் எல்லாம் நெருப்பாக பாய்கின்றது
பொய்மை மனம் சுற்றி எனைத் தாக்குகின்றது
உண்மை அன்பைத்தேடி உள் நெஞ்சம் ஏங்குகின்றது
1,2ரிபீட்
மலர் விரியாமல் மொட்டாக கருகுகின்றது
எண்ணம் கரடாக காய்ந்திங்கு வாடுகின்றது
எதற்கிந்த சோதனைகள்
என் உள்ளம்துகளாக உடைகின்றது
சோகம் தீண்டாத நாளில்லை
சுமை இறக்கத்தான் ஆள் இல்லை
தோல் கொடுக்கும் காலம் எனக்கு
துன்பம் தானே தாரை வார்க்குது
1,2ரிபீட்
துணிந்திங்கு அடிவைத்தால்
கை கொடுக்கும் நட்புக் கூட தூரப்போகுது
ஊர்சுற்றும் சேவலிற்கு அடைக்கலம் உண்டு
உண்மையாக வாழும் மனிதர் சாபம் பெற்றவரோ?
துயரக்கடலில் நீந்திடத்தான் என்னை படைத்தனரோ
சோகம்தான் நிலை என்றால்
எதற்கிந்த வாழ்க்கை
எதைத்தேடி பயணங்கள் நடைபோடுமோ.

No comments:

Post a Comment